6ஆவது நாளாக 4 இலக்கத்தில் கோவிட் தொற்று

புத்ராஜெயா: மலேசியா செவ்வாய்க்கிழமை      (ஏப்ரல் 20) 2,341 புதிய கோவிட் -19 தொற்று சம்பவங்களை பதிவு செய்துள்ளது. இது நாட்டின் மொத்த உறுதிப்படுத்தப்பட்ட தொற்று 379,473 ஆகக் கொண்டு வந்துள்ளது.

சுகாதார தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஒரு டூவிட்டர் பதிவில், சரவாக் 600 புதிய நோய்த்தொற்றுகளுடன் அதிக சம்பவங்களை பதிவு செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து சிலாங்கூர் 539, கிளந்தான் 429 , கோலாலம்பூர் 344 சம்பவங்கள் உள்ளன. தொற்றின் எண்ணிக்கை 6ஆவது நாளாக 4 இலக்கத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here