ஒரு சொல் வெல்லும் , ஒருசொல் கொல்லும்!

வெற்றி !வெற்றி! வெற்றி. 

இப்படிச்சொல்லும்போதே இல்லமும் உள்ளமும்  பூரிப்பாய் மிதக்கிறது. இது எண்ணத்தின் வெளிப்பாடாகவும் இருக்கிறது. வெற்றி என்றால் மிகச்சிறப்பானது என்று மனம் பதிவு செய்து கொள்கிறது என்பதே இதற்குக் காரணம்.

இந்த வார்த்தைக்ப்குபின் மனத்தில் ஏற்படும் ஒருவித கிளர்ச்சி உடலெங்கும் வியாபித்து உற்சாகம் என்ற வாகனத்தை இயக்கிவிடுகிறது. பின்னர் அந்த உற்சாகமே உடலின் தொடர் இயக்கத்திற்குக் காரணமாகிவிடுகிறது. அதனால் உடல் செயல்படத் தயாராகிவிடுகிறது. இது மூளையின் கட்டளையால் செயல்படுகிறது. 

அந்த முளைக்கு அனுப்பப்படும் மகிழ்ச்சியான செய்திதான் கட்டளையாக மாறி உடலைத் தெம்பாக இயக்க வழியமைத்துக்கொடுக்கிறது.

திருவள்ளுவன் சொன்ன “ கனியிருப்பக் காய் கவர்ந்தற்று ‘ என்ற வாய்மொழியும் இதைத்தான்  உணர்த்துகிறது. 

இதிலிருந்து நல்ல மகிழ்ச்சியான செய்தியை மூளையும் அதன் கட்டளைகளும் உடல் செய்லபாட்டுக்குத் தேவையான மருந்தாக, ஆரோக்கிய விருந்தாக அமைகிறது என்றால் நோய் என்பது நெருங்கக்கூடத் தயங்கி ஒதுங்கிச்செல்லும் என்பது  ஆராய்ச்சியாளர்கள் கண்ட உண்மை. 

பலருக்கு நோய்கள் பல வடிவங்களில் வந்து தாக்குக்குகிறது என்றால் மனத்தளவில் தெம்பற்றவர்களாக இருக்கிறோம் என்றுதான் பொருள்படுகிறது. மகிழ்ச்சிக் குறியவற்றைப் பேசும்போதும் செயல்படும்போதும் உடல் உற்சாகமடைகிறது. அப்போது நோயெதிர்ப்புச் சக்திக்கான சக்தியை தன்னியக்கமாகவே உடல்பெற்றுவிடுகிறது. இதற்குக்காரணம் உடலில் இருக்கும் நல்ல சக்திதான் காரணம். இந்த நல்ல சக்தியை உருவாக்கும் தன்மை நல்ல வார்த்களில்களில் கொட்டிக்கிடக்கிறது.

இதைத்தான் தமிழில் ஒருவார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் என்றார்கள்.

அந்த நல்ல வார்த்தைகளை தினம் தினம் உச்சரித்தால் மருந்து வேண்டாம் என்பதை மகான்களும் ஞானிகளும் கூறி வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு முன் நம் பாட்டனுக்கும் பாட்டன், முப்பாட்டனுக்கும் முப்பாட்டன் திருவள்ளுவன் ஒரு மருத்துவனாக கூறிச்சென்றிருக்கிறான் என்றால் அந்த உலக ஞானியின் வழித்தோன்றல்களான  தமிழினம் எத்துணை பாக்கியம் செய்திருக்க வேண்டும்?

இன்று மக்கள் கடுமையான நோயில் வீழ்ந்துகிடக்கிறார்கள். உடல் வலுவற்றுக்கிடக்கிறது என்பதே காரணம் என்கிறார்கள். உடலுக்கு நோயெதிர்ப்புச் சக்தி இல்லை என்கிறார்கள். அப்படியென்றால் நல்வழிமுறையில் தவறு நேர்ந்திருக்கிறது என்றுதானே பொருள்.

அடிப்படையில் மருந்தைக் குறைக்கும் காரணியாக நல்ல வார்த்தைகள் தமிழில் மட்டுமே  கொட்டிக்கிடக்கின்றன என்ரும் கூறலாம்.

 இசுலாமிய நாடுகள் கூட தமிழை முதன்மை மொழி என்று மறுவின்றி ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவையாவும் உண்மைத்தமிழ் மக்களின்  கண்களுக்குப் புலப்படவில்லையே ஏன் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.

நல்ல எண்ணம் , நல்ல வார்த்தை என்பதெல்லாம் தமிழனுக்கும் தமிழுக்கும் புதுமையான வரவுகள் அல்ல. தமிழே மருந்து என்று ஒரு வார்த்தை இருக்கிறது. இந்த மருந்து நோய்க்கானதல்ல. நோய் வராமல் தடுப்பதற்கானது. 

தமிழைத் தமிழாக உச்சரித்தாலே போதும் . அதுதான் நிரந்தர வெற்றி.  இயல்பாகவே வெற்றி நாடிவரத்தொச்டங்கிவிடும். 

இப்படிச்சொல்வதே மந்திரம் ஆகி புது தெம்பைக் கொடுக்கிறது. அதனால்தான் தெய்வ மொழியென்று உருவாக்கி சக்தி மிக்க வார்த்தைகளை உச்சரிக்கச் செய்திருக்கிறாகள் முன்னோர்கள். நல்ல  உச்சரிப்பெல்லாம் தெய்வீகமே என்பதும் அதனால்தான்.

அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை என்ற நல்ல உறவு வார்த்தைகலைச் சொல்லிப்பார்த்தால் புரியும் . அன்பு என்பது மணற்கேணியாய் பெருகும். இது வித்தை எப்படி நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் அது வெற்றி.

தமிழே மருத்துவம் என்பதால் அதனில் சக்திமிக்க மாத்திரைகள் இருக்கின்றன. இந்த மாத்திரைகள் கேடானவை யல்ல. அனைத்தும் நன்மையான ஒலிக்கும் மாத்திரைகள். இவ்வார்த்தைகள் தீய நோக்கத்துடனோ அல்லது தவறான சொல்லாகவோ பயன்படுத்தப்படுமானால் இவ்வொலி மாத்திரைகள் எதிர்வினையை உருவாக்கிவிடும்.

அதனால் நல்ல வீரியமிக்க வார்த்தைகளை மட்டுமே பயன்மிக்க வார்த்தைகளாகப் பயன்படுத்தினால் நன்மையே வந்து சேரும். இதனால் வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்.

மந்திரங்களும் சுலோகங்களும் அப்படி உருவானவைதான். மந்திரங்கள் மகிழ்ச்சிக்கு மட்டுமே உருவாக்கப்பட்டவை. அதை தவறாகப் பேசினால் துன்பம் நிச்சயம். 

மங்களம், அமங்களம் இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் அறிந்தால் நோயை வென்று விடலாம்.

கா. இளமணி

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here