215,000 ரிங்கிட் பெறுமதியான போதைப்பொருள் கடத்தல் ஜோகூர் போலீசாரினால் முறியடிப்பு

தீய­ணைப்­புச் சாத­னங்­களில் போதைப்­பொ­ருட்­களை மறைத்து வைத்து, குளி­ரூட்­டப்­பட்ட லாரி­க­ளின் மூலம் சிங்­கப்­பூ­ருக்கு அனுப்­பும் போது போலீஸாரின் சோதனையின் போது பிடி­பட்­ட­தாக ஜோகூர் மாவட்ட போலிஸ் தலை­வர் அயோப் கான் மைதீன் பிச்சை தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூரின் மத்திய போதைப்­பொ­ருள் தடுப்­புப் பிரிவு மலே­சி­யா­வின் புக்­கிட் அமான் போதைப்­பொ­ருள் குற்­ற­வி­யல் புல­னாய்­வுத்­துறை மற்­றும் ஜோகூர் போலிஸ் துறை ஆகி­யோ­ரி­டம் இந்த கடத்­தல் குறித்த தக­வலை உள­வுத்­துறை தெரி­வித்­த­தை­ய­டுத்து இந்த சட்­ட­வி­ரோ­தச் சம்­ப­வம் முறி­ய­டிக்­கப்­பட்­ட­தாக அவர் மேலும் கூறினார்.

இந்­தக் கடத்­தல் கும்­பல் மலே­சி­யா­வில் இருந்து அண்டை நாடு­க­ளுக்­குப் போதைப்­பொ­ருள் கடத்­து­வ­தையே தொழி­லா­கக் கொண்­டுள்­ளது என்றும் இக்கும்பல் கடந்த மூன்று மாதங்­க­ளாக இது­போன்ற சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டு­வ­ரு­வ­தாகவும் நம்­பப்­ப­டு­கிறது எனவும் ஓர் அறிக்­கை­யின் மூலம் தெரி­வித்­துள்­ளார்.

ஜோகூர் பாருவில் மே மாத இறு­தி­யில் நடத்­தப்­பட்ட அதி­ர­டிச் சோத­னை­களில் சட்­ட­வி­ரோ­தச் செயல்­களில் ஈடு­பட்­ட­தாக ஒன்­பது பேர் கைது செய்­யட்­டுள்­ள­தாக ஜோகூர் காவல்­து­றைத் தலை­வர் நேற்று தெரி­வித்­தார். அவர்­களில் மலே­சி­யா­வைச் சேர்ந்த ஏழு ஆண்­களும், ஒரு பெண்­ணும் அடங்­கு­வர். கைது­ செய்­யப்­பட்ட இன்­னொ­ரு­வர் இந்­தோ­னீ­சி­யா­வைச் சேர்ந்­த­வர்­. இவர்­கள் அனை­வ­ரும் 26 வயது முதல் 40 வய­துக்­குள்­ளா­ன­வர்­கள்.

கடத்­தல் கும்­ப­லி­டம் இருந்து கைப்­பற்­றப்­பட்ட போதைப் பொருட்­க­ளின் மதிப்பு 215,000 ரிங்கிற்றுக்கும் மேற்பட்டது என்று நம்பப்படுகிறது. அந்­தப் போதைப்­பொ­ருட்­களில் 7 கிலோ கஞ்சா, 4.5 கிலோ கிறிஸ்­டல் மெதம்­ஃபெ­ட­மின் மற்­றும் சுமார் 3 கிலோ ஹிரோ­யின் ஆகி­யவை அடங்­கும். அந்­தக் கும்­ப­லி­டம் இருந்து கைப்­பற்­றப்­பட்ட பொருட்­களில் 8 வாக­னங்­கள், பணம், நகை­கள் ஆகி­ய­வை­யும் அடங்­கும்.

போதைப்­பொ­ருள் கடத்தல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மலே­சி­யா­வில் மரண தண்­டனை விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here