லிட்டில் இந்தியாவில் உள்ள பாடாங் செட்டி டத்தாரான் மஜ்ஸிஸ் பெர்பண்டாரான் கிளாங் என்று பெயர் மாற்றமா?

கிள்ளான் நகராண்மை கழகம் லிட்டில் இந்தியா பாடாங் செட்டியின் பெயரை டத்தாரான் மஜ்ஸிஸ் பெர்பண்டாரான் கிளாங் என்று புதிய பெயர் மாற்றும் விஷயம் குறித்து கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை சபை தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்துகிறது.

லிட்டில் இந்தியாவில் உள்ள ஜாலான் புக்கிட் ஜாவாவில் அமைந்துள்ள பாடாங் செட்டி என்று அழைக்கப்படும் பகுதி, கிள்ளான் நகராட்சி மன்றத்தால் (எம்.பி.கே) டத்தாரான் மஜ்ஸிஸ் பெர்பண்டாரான் கிளாங் என மறுபெயரிடப்படும் என்று உறுப்பினர்களிடமிருந்து பல புகார்களையும் அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் கண்காணிப்பினூடாகவும் நாங்கள் பெற்றுள்ளோம். இது சம்பந்தமாக, பாடாங் செட்டியின் பெயரை எம்.பி.கே அதிகாரிகளால் பெயர் மாற்றம் செய்யப்படுவதற்கான முயற்சியை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்று கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறைத் தலைவர் டத்தோ ஆர்.ராமநாதன் தெரிவித்தார்.

ஏறக்குறைய 100 ஆண்டுகள் பழமையான பாடாங் செட்டியின் வரலாற்று உண்மைகளைக் குறிப்பிடுகையில், கிள்ளானில் உள்ள இந்திய சமூகத்தின் வருகைக்கான வரலாற்று இடமாக இது அங்கீகரிக்கப்பட வேண்டும். பாடாங் செட்டி  பெயரை மாற்ற எம்.பி.கே எடுத்த நடவடிக்கை இந்த இடத்தின் நீண்ட கால வரலாறு மற்றும் கிளாங்கில் இந்திய சமூகத்தின் பங்களிப்பினை அழித்து விடும்.

இந்த பெயர் மாற்றம் குறித்து   சிலாங்கூரின் YAB டத்தோ ஶ்ரீ மந்திரி பெசாரிடம் எங்களின் கருத்துகளை கூற அழைக்கிறோம் மேலும் பாடாங் செட்டியின் பெயரை மாற்றுவதற்கான முயற்சியை ரத்து செய்ய வேண்டும்.  இது இந்தியருக்கு குறிப்பாக சிலாங்கூர் சமூகத்தினருக்கு அதிக வரலாற்று மதிப்புள்ள பாரம்பரிய இடமாகும்.

சிலாங்கூர் மந்திரி பெசார்  டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி மக்கள் நலனில் அக்கறை கொண்டவர் என்பதோடு  இந்திய சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு எப்போதும் பாடுபடுகிறார். மேலும் மக்களின் கோரிக்கைகள் குறித்து அக்கறை கொண்டுள்ளார். இதனால் பாடாங் செட்டி  என்ற பெயர் நிலைக்க கவனம் செலுத்துமாறு டத்தோஶ்ரீ நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இதனால் இந்த  இந்திய பாரம்பரிய இடம் (தளம்) வருங்கால சந்ததியினருக்காக தொடர்ந்து பாதுகாக்கப்படும். குறிப்பாக கிள்ளானில் உள்ள இந்திய சமூகத்தின் நலனுக்காக என்றார்.

இந்த விஷயத்தில் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி எங்கள் கோரிக்கை செவி சாய்த்து ஒத்துழைப்பு வழங்குவார் என்று நம்புகிறோம்.  சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருக்கு எங்களின் நன்றியையும் இவ்வேளையில் தெரிவித்து கொள்கிறோம் என்கிறார் டத்தோ ராமநாதன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here