கோழி முட்டைக்கு வயது 1000

வியப்பைத் தந்த கண்டுபிடிப்பு!

1000 வருஷங்களுக்கு முந்தைய ஒரு கோழி முட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. அது இன்னமும் உடையாமல் இருப்பது பெரும் ஆச்சரியத்தை கிளப்பி வருகிறது.

இஸ்ரேலின் மத்திய பகுதியில் யவ்னே என்ற நகர் உள்ளது.. இங்கு நீண்ட நாட்களாகவே அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது.. வேறு எதையோ கண்டுபிடித்து கொண்டிருக்கும்போதுதான், ஒரு சாக்கடையில் வெள்ளையாக உருண்டையாக ஒன்று கிடப்பதை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்தனர். 

பிறகுதான் அது கோழி முட்டை என்றே தெரியவந்தது.. இந்த முட்டையின் ஓட்டை வைத்து அது எவ்வளவு பழமை வாய்ந்தது என்பதை கண்டறிந்தனர் ஆய்வாளர்கள்.

அப்போதுதான் அந்த முட்டைக்கு வயசு 1000 ஆகிறது என்பதும் தெரியவந்தது.  இந்த முட்டையின் அடிப்பகுதியில் லேசான விரிசலும் ஏற்பட்டிருக்கிறதாம். கிட்டத்தட்ட 1,000 வருஷங்கள் ஆகியும் அந்த முட்டை இன்னமும் உடையாமல் இருப்பதை பார்த்து அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆச்சரியப்பட்டு போய்விட்டனர்.

இந்த கோழி முட்டை தங்களுக்கு ஒரு அரிதான கண்டுபிடிப்பு என்றும் பெருமிதம் கொள்கின்றனர்.

முந்தைய காலங்களிலும் டோவிட், சிசோரியா அப்போலினயா போன்ற நகரங்களில் முட்டை துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன… ஆனால் முட்டைகளின் உடையக்கூடிய தன்மை காரணமாக, உலக அளவில் கூட எந்த கோழி முட்டைகளும் இதுவரை பாதுகாக்கப்படவில்லை..‌

அப்படி இருக்கும்போது, தங்களுக்கு இது மிகவும் அரிதான கண்டுபிடிப்பு” என்கின்றனர். 

இதுகுறித்து ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் லீ பெர்ரி சொல்லும்போது, “தென்கிழக்கு ஆசியாவில் 6,000 வருஷங்களுக்கு முன்பு கோழிகள் வளர்க்கப்பட்டன.. ஆனால் அவைகளை மனிதர்கள் வெகு காலம் கழித்துதான் உணவில் சேர்த்து கொண்டனர் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here