நாட்டில் கொரோனா நோய்த்தொற்று விகிதம் 1.16 ஆக அதிகரிப்பு;டாக்டர் நூர் ஹிஷாம் கவலை

கோலாலம்பூர், ஜூலை 14:

நாட்டில் கோவிட் -19 தொற்று சடுதியாக அதிகரித்து வருகின்றது. இதற்கு டெல்தா வகை கோவிட்டின் திரள் பரவலே காரணம் என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மேலும் தேசிய தொற்று வீதம் (R0) இப்போது 1.16 ஐ எட்டியுள்ளது, இது ஒரு மாதம் சீரான அதிகரிப்பின் உச்சக்கட்டமாகும்.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஜூன் 13 முதல் 30 நாட்களுக்கு தொற்றுத் தரவைவை தனது முகநூலில் பகிர்ந்து கொண்டார். இது ஜூன் கடைசி வாரத்தில் படிப்படியாக குறைந்து வருவதைக் காட்டியது.

ஆனால் ஜூன் 27 கடைசியாக R0 1 க்குக் கீழே இருந்தது. மேலும் 16 மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களில், லாபுவன், சரவாக் மற்றும் பெர்லிஸ் மட்டுமே R0 மதிப்புகளை 1 ஐ விடக் குறைவாகவே இருந்தது. இந்த மூன்று மாநிலங்களிலும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்களின் விகிதங்கள் அதிகம் கொண்டுள்ளன.

எனினும் நோய்த்தொற்று விகிதம் புத்ராஜெயா (1.35), திரெங்கானு (1.26) மற்றும் சிலாங்கூர் (1.19) ஆகியவை மிக உயர்ந்த R0 மதிப்புகளைக் கொண்டுள்ளன. மேலும் ஐந்து பகுதிகளில் 1.1 க்கு மேல் R0 மதிப்புகள் உள்ளன.

இந்நோய்த்தொற்று வீதம் சராசரியாக எத்தனை பேர் பாதிக்கப்பட்ட கோவிட் -19 வைரஸை பரப்புகின்றனர் என்பதற்கான ஒரு அளவீடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here