பதின்ம வயதினருக்கான கோவிட்-19 தடுப்பூசி பதிவு மைசெஜ்தெரா செயலி மூலம் ஆரம்பம்

கோலாலம்பூர், ஜூலை 22:

நாட்டில் கோவிட் -19 தடுப்பூசி மிக வேகமாக தேசிய தடுப்பூசி நடவடிக்கை இயக்கம் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட பதின்ம வயதினருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பதிவு மைசெஜ்தெரா மூலம் தொடங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 2003 ஆம் ஆண்டு பிறந்த மாணவர்கள் மற்றும் வெளிநாட்டில் கல்வியை தொடர இருக்கும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமையளிக்கப்படும் என்று தேசிய தடுப்பூசிக்கான நடவடிக்கை இயக்கம் தெரிவித்துள்ளது.

மேலும் நோய்த்தொற்று அபாயம் உள்ள சிறுவர்கள் மற்றும் பதின்மவயதினருக்கு தடுப்பூசி செலுத்துவதிலும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் அவ்வியக்கம் தெரிவித்தது.

இதுவரை 15 மில்லியன் மக்கள் தடுப்பூசியை செலுத்தியிருக்கிறார்கள் என்பதும் மேலும் கோவிட் -19 இல் இருந்து குணமாகுபவர்களது எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here