பட்டர்வொர்த்தில் உள்ள சொகுசுமாடி குடியிருப்பில் போதைப்பொருள் விருந்து; எண்மர் கைது

பட்டர்வொர்த்: ஜாலான் லெஸ்டாரியில் உள்ள ஒரு சொகுசுமாடிக்குடியிருப்பில் நடந்த போதைப்பொருள் விருந்தில் ஈடுபட்ட எட்டுப்பேரை செவ்வாய்கிழமை (ஆகஸ்டு 17) போலீசார் கைது செய்தனர்.

நேற்று மாலை 6 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையின் போது, நான்கு உள்ளூர் ஆண்கள் மற்றும் நான்கு வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டதாக மாநில குற்றப்பிரிவுத் துறை சிரேஸ்ட துணை கமிஷனர் ராஹிமி ராயிஸ் கூறினார்.

துணை சூப்ரிண்டன் அக்மல் யஹாயா மற்றும் ASP முகமட் ஃபைரூஸ் முஸ்தபா தலைமையிலான ரெய்டு பினாங்கு போலீஸ் படையின் சூதாட்ட மற்றும் இரகசிய சங்க பிரிவு (D 7) பிரிவால் நடத்தப்பட்டது.

“பினாங்கு மாநில PDRM முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒர் பதிவில்,” பொதுமக்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், சொகுசுமாடிக்கட்டடத்தின் 10ஆவது மாடியிலுள்ள பிரிவை போலீசார் சோதனையிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் ஒரு வருடத்திற்கு முன்பே ஆண் சந்தேக நபர்களில் ஒருவரால் அப்பிரிவு வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் கண்டறிந்ததாக SAC ராஹிமி தெரிவித்தார்.

சொகுசுமாடிக்குடியிருப்பின் 10 மாடியிலுள்ள குறித்த பிரிவில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​சந்தேக நபர்களால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பல்வேறு வகையான போதைப்பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளில் எரிமின் 5, எக்ஸ்டஸி மாத்திரைகள் மற்றும் மருந்துகள் மற்றும் சியாபு கலந்த பானங்கள் ஆகியவை அடங்கும்.

கைது செய்யப்பட்ட எட்டுபேரில் ஏழு பேர் போதைப்பொருள் சோதனையில் நேர்மறையான பதிலை பதிவு செய்ததாக அவர் கூறினார்.

மேலும் சோதனையின் போது, ​அப்பிர்வில் இருந்து ஆடியோ அமைப்புகள் மற்றும் டிஸ்கோ விளக்குகளையும் போலீசார் கைப்பற்றினர்.

“தேசிய மீட்பு திட்டம் NRP) காலத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட இந்த சொகுசுமாடிக்குடியிருப்பின் பிரிவு தற்காலிக பொழுதுபோக்கு மையமாக மாற்றப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

தண்டனைச் சட்டம் பிரிவு 269, ஆபத்தான மருந்துச் சட்டம் 1952 பிரிவு 12 (3) மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 15 (1) ஆகியவற்றின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றார்.

போதைப்பொருள் விருந்து பற்றிய தகவல்களை காவல்துறையினருக்கு அளித்த பொதுமக்களுக்கு காவல்துறை நன்றி தெரிவித்ததுடன், குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களை காவல்துறையினருக்கு வழங்குவதில் பொதுமக்களின் ஒத்துழைப்பை வரவேற்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here