கறிவேப்பிலை ஒரு பாரம்பரியமான உணவாகும். பல நூற்றாண்டுகளாக இந்தியர்களா ல் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு உணவாக கறிவேப்பிலை உள்ளது. கறிவேப்பிலை பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை அதிகமாக கொண்டுள்ளது.
சீன மருத்துவ இதழில் கறிவேப்பிலை பற்றி மேற்கொண்ட ஆய்வானது வெளியானது. அதன்படி, கறிவேப்பிலை நமது உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலமாக நமது இதயம் ஆரோக்கியமாக இருக்க கறிவேப்பிலை உதவுகிறது. இது பல்வேறு ஆயுர்வேத வைத்தியங்களுக்கு உதவியுள்ளது.
கறிவேப்பிலை செரிமான சக்தியை அதிகரிக்க உதவுகிறது, கறிவேப்பிலை கண்ணுக்கு நல்லது என்கிற சொல்லை ஊர்ப்புறங்களில் கேட்க முடியும். அது உண்மைதான், கறிவேப்பிலை பார்வையை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இரத்த சோகையை தடுக்கவும் இது உதவுகிறது.
கறிவேப்பிலையில் மற்றுமொரு முக்கியமான அம்சம் என பார்த்தால் அது உடல் எடை இழப்பிற்கு உதவுகிறது. இது செரிமான சக்தியை அதிகரித்தல், கொழுப்பை கட்டுப்படுத்துதல் மற்றும் கொழுப்பை எரிக்கும் திறன் ஆகியவை காரணமாக உடல் எடை குறைப்பிற்கு வெகுவாக உதவுகிறது.
மேலும் நிபுணர்கள் கூறும்போது “வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை சாப்பிடும்போது கறிவேப்பிலை உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பை அகற்றுவதற்கு உதவுகிறது. மேலும் உங்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் இது உதவுகிறது. இதன்மூலம் எடை குறைப்பிற்கு இது உதவுகிறது. வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை மென்று சாப்பிடுவதை தொடர்ந்து செய்வதன் மூலம் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை சுத்தப்படுத்தி அவற்றை அகற்றுகிறது” என கூறுகின்றனர்.
மேலும் இது கலோரிகளை எரிக்கவும் உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கவும் உதவுகிறது. இதன் மூலமாக உடல் பருமன் ஏற்படுவதை தடுப்பதோடு ஏற்கனவே உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு எடையை குறைக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையில் மஹானிம்பைன் என்ற ஆல்கலாய்டு உள்ளது, இது உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. மேலும் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.
உங்கள் உணவில் கறிவேப்பிலையை சேர்க்கலாம். கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிடுதல். கறிவேப்பிலை தண்ணீரை தயாரித்து உட்கொள்ளலாம். அதை எப்படி செய்வது என பார்க்கலாம்.
சுமார் 10 முதல் 20 கறிவேப்பிலை இலையை எடுத்து அதை தண்ணீரில் நன்கு கொதிக்க வைக்கவும். நன்றாக கொதிக்க பிறகு அதில் இருந்து இலைகளை அகற்றுவதற்காக தண்ணீரை வடிக்கட்டவும்.
வெறும் கறிவேப்பிலை தண்ணீர் சிலருக்கு பிடிப்பதில்லை. ஏனெனில் இதில் பெரிதாக சுவை எதுவும் இருப்பதில்லை. எனவே சுவைக்காக எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
மேலும் கறிவேப்பிலையுடன் நல்ல உடற்பயிற்சியும் சேரும்போது அது நமக்கு பல நன்மைகளை வழங்குகிறது. எனவே கூடுதலாக தினமும் உடற்பயிற்சி செய்வதற்கு மறந்துவிடாதீர்கள். ஆரோக்கியமான உணவு, சரியான உடற்பயிற்சி மற்றும் கூடவே கறிவேப்பிலை தண்ணீர் குடிக்கும்போது உங்களால் எளிதாக உடல் எடையை குறைக்க முடியும்.