மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தவர் என நம்பப்படும் ஒரு பெண்; ஆற்றில் சடலமாக மிதக்கக் காணப்பட்டார்

தெலுக் இந்தான், அக்டோபர் (21) :

டுரியான் செபதாங் ஜெத்தி அருகேயுள்ள பேராக் ஆற்றில் குதித்ததாகக் கருதப்படும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் நேற்று நள்ளிரவு நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்.

கம்போங் பேச்சா அருகேயுள்ள சுங்கை பிடோரில் நள்ளிரவு 12.05 மணியளவில் ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பொதுமக்களால், 49 வயதுடைய அந்தப் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

உடல் மூழ்கியதாகக் கருதப்படும் இடத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் அவரது உடல் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஹிலீர் பேராக் மாவட்ட காவல்துறைத் தலைவர் ACP அஹமட் அட்னான் பஸ்ரி இச்சம்பவம் பற்றிக் கூறுகையில், சம்பவம் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றதும் தீயணைப்பு வீரர்களுடன் காவல்துறையினரும் மேலதிக நடவடிக்கைகளுக்காக அந்த இடத்திற்குச் சென்றனர்.

பாதிக்கப்பட்டவரின் உடல் சுங்கை டுரியான் செபதாங் ஜெத்திக்கு கொண்டு செல்லப்பட்டது மற்றும் பாதிக்கப்பட்டவரின் உடலை பரிசோதித்ததில் குற்றவியல் கூறுகள் எதுவும் இல்லை என்றார்.

“நெருங்கிய உறவினர்களால் இறந்தவரது உடல் உறுதிச் செய்யப்பட்டது மற்றும் இறந்தவர் காணாமல் போயிருந்தது தொடர்பில் ஏற்கனவே போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது,” என்று இன்று அவரை தொடர்பு கொண்டபோது கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்டவரின் உடல் கோவிட் -19 ஸ்கிரீனிங் சோதனையின் முடிவுகளைப் பெற்றபின் பிரேத பரிசோதனைக்காக தெலுக் இந்தான் மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு (HTI) அனுப்பப்பட்டது.

இறந்த பெண் இரண்டு மாதங்களுக்கு முன்பு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் அதற்கான காரணத்தை அவருடைய கணவனால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

“இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது,” என்றும் அவர் கூறினார்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் நேற்று பேராக் ஆற்றில் குதித்ததாக நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் காலை 9 மணியளவில் வீட்டில் இல்லை, அவரது கணவர் அப்பெண்ணைக் கண்டுபிடிக்க முயன்றார், ஆனால் அவரது மனைவியைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அறியமுடிகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here