58 கோவிட் சுய பரிசோதனை கருவியின் பட்டியலை சுகாதார அமைச்சகம் வெளியீட்டது

சுகாதார அமைச்சகம் (MOH) இன்று 58 கோவிட்-19 சுய-பரிசோதனை கருவிகளின் சமீபத்திய பட்டியலை வெளியிட்டது. அவை மருத்துவ சாதனங்கள் ஆணையத்தால் (MDA) நிபந்தனைக்குட்பட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, சோதனைக் கருவிகள் சமூக மருந்தகங்கள் மற்றும் சுகாதார வசதிகள் மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்தில் (KPDNHEP) பதிவுசெய்யப்பட்ட வளாகங்களில் மட்டுமே கிடைக்கும் என்றார். என்று அவர் இன்று தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.

MDA இன் அதிகாரப்பூர்வ போர்ட்டலில் https://portal.mda.gov.my அல்லது MDA இன் Facebook மற்றும் Instagram பக்கங்கள் வழியாக பொதுமக்கள் முழுமையான சோதனைக் கருவிப் பட்டியலைப் பார்க்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here