அவசியமான சில ஆரோக்கிய குறிப்புகள்

அன்றாட வாழ்வில் நாம் சிலபல விஷயங்களை தெரிந்தோ தெரியாமலோ செய்து வருகிறோம். அப்படி நாம் மேற்கொள்ளும் விஷயங்களில் சில நன்மையாகவும், சில தீங்கு விளைவிப்பவையாகவும் இருக்கலாம்.

ஆனால் பலருக்கும் தீங்கு விளைவிக்கும் செயல்கள் என்னவென்று தெரிவதில்லை. அப்படி தெரியாமலேயே அன்றாடம் அவற்றை பின்பற்றி வந்து, பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

ஆரோக்கிய குறிப்பு

  • மாத்திரைகளை சாப்பிடும் போது குளிர்ச்சியான நீரில் எடுப்பதை தவிர்த்து, வெதுவெதுப்பான நீரில் எடுக்க வேண்டும்
  • எப்போதும் 5 மணிக்கு மேல் வயிறு நிறைய உணவை உட்கொள்ளும் பழக்கத்தை கைவிட வேண்டும்.
  • பகல் நேரத்தில் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரித்து, இரவில் நேரத்தில் குறைத்துக் கொள்ள வேண்டும்.
  • தினமும் இரவில் 10 மணிக்கு தூங்கி, அதிகாலையில் 4 மணிக்கு எழும் பழக்கத்தைக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
  • எப்போதும் உணவை உண்ட பின் தூங்கும் பழக்கத்தை கொண்டவராயின், அவற்றை உடனே தவிர்ப்பது நல்லது.
  • போன் பேசும் போது இடது பக்கம் வைத்து பேசுவது நல்லது.
  • மொபைலை சார்ஜ் போட்டுக் கொண்டே பேசுவதை தவிர்க்க வேண்டும். அதிலும் பேட்டரி மிகவும் குறைவாக இருக்கும் நேரத்தில் சார்ஜ் போட்டிருந்தால், அப்போது எந்த ஒரு அழைப்பு வந்தாலும் பேச வேண்டாம். ஏனெனில் சாதாரண நேரத்தை விட, சார்ஜ் போட்டிருக்கும் நேரத்தில் கதிர்வீச்சு 1000 மடங்கு அதிகமாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here