‘மைக்கேல் மதனகாமராஜன்’ படத்தின் ‘பீம்பாய்’ காலமானார்: திரையுலகினர் இரங்கல்

உலகநாயகன் கமலஹாசன் நான்கு வேடங்களில் நடித்த ’மைக்கேல் மதன காமராஜன்’ என்ற திரைப்படத்தில் பீம்பாய் என்ற கேரக்டரில் நடித்த நடிகர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 1990ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ’மைக்கேல் மதன காமராஜன்’. நான்கு வேடங்களில் கமல்ஹாசன், ஊர்வசி, ருபினி, குஷ்பு உள்பட பல நடித்த இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருப்பார் என்பதும் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கினார்.

இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனின் உதவியாளராக பிரவீன் குமார் நடித்து இருந்தார் என்பதும் இவர் மகாபாரதம் தொடரில் பீமன் கேரக்டரில் நடித்ததால் இந்த படத்தில் பீம்பாய் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பீம்பாய் பிரவீன்குமார் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் காலமானார். இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் பிரவீன் குமார் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here