சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 21,072 கோவிட் -19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இது நேற்று பதிவான 22,802 வழக்குகளில் இருந்து சற்று குறைந்துள்ளது. புதிய நோய்த்தொற்றுகளில் 3, 4 மற்றும் 5 வகைகளில் 86 (அல்லது மொத்தத்தில் 0.41%) மட்டுமே மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் என்று சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
இன்று 10 கிளஸ்டர்கள் (கொத்துகள்) பதிவாகியுள்ளதாக அவர் கூறினார். புதிய தொற்றுகளில் 21,007 உள்ளூர் நோய்த்தொற்றுகள் உள்ளன. இதில் 21,007 மலேசியர்கள் மற்றும் 481 வெளிநாட்டவர்கள் உள்ளனர். இன்று 65 இறக்குமதி தொற்றுகள் பதிவாகியுள்ளன.
நோய்த்தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை இப்போது 3,040,235 தொற்றுகளாக உள்ளது. 5,724 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,852,437 ஆக உள்ளது என்று நூர் ஹிஷாம் கூறினார்.
மருத்துவமனையில் உள்ளவர்களில் 187 நோயாளிகள் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 98 பேருக்கு கோவிட்-19 தொற்றும் மற்றும் 89 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறார்கள். 109 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது. 47 பேருக்கு கோவிட்-19 தொற்றும் மற்றும் மீதமுள்ள 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
நாட்டின் கோவிட்-19 தொற்று விகிதம் (R-nought, அல்லது R0) 1.49 ஆக உள்ளது. லாபுவானில் அதிகபட்ச R0 அளவு 2.14 உள்ளது. அதைத் தொடர்ந்து சரவாக் (1.67), சபா (1.66), பெர்லிஸ் (1.47), பினாங்கு (1.46) , ஜோகூர் (1.40), பகாங் (1.38), கிளந்தான் (1.37), சிலாங்கூர் (1.37), தெரெங்கானு (1.35), கெடா (1.35), புத்ராஜெயா (1.34), நெகிரி செம்பிலான் (1.31), மலாக்கா (1.28), பேராக் (1.27), ) மற்றும் கோலாலம்பூர் (1.22).
























