மலாக்காவில் கோவிட்-19 காரணமாக இதுவரை 11 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன

மலாக்கா, பிப்ரவரி 18 :

மலாக்கா மாநிலத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கோவிட் -19 தொற்றுக்கள் அதிகரிப்பதால் மொத்தம் 11 பள்ளிகளை 5 முதல் 7 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று வரை, கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 1,258 ஆக இருந்தது, ஆனால் இதுவரை இக்கல்விக்குழுவில் அபாயமான நிலையிலுள்ள எந்த தொற்றுக்களும் பதிவாகவில்லை என்று மாநில கல்வி மற்றும் தொழில்நுட்ப அதிகாரி டத்தோ ரைஸ் யாசின் கூறினார்.

பள்ளிகள் மாநில சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் மூடப்பட்டுள்ளது என்றும், மேலும் சில பள்ளிகளில் நிலைமை மற்றும் கோவிட்-19 பரவும் அளவைப் பொறுத்து அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

“மூடப்பட்டுள்ள பள்ளியின் கற்றல் மற்றும் கற்பித்தல் (PdPR) அமர்வுகள் வீட்டிலேயே இணைய முறை மூலம் தொடரும், ஏனெனில் மாணவர்களின் கற்றலின் தொடர்ச்சியை உறுதி செய்வது முக்கியம் என்றார்.

“மேலும் கல்வி மற்றும் தொழில்நுட்பக் குழு கற்றல் மற்றும் கற்பித்தல் தடைப்படுவதை தடுக்க குழுவின் கற்றலின் செயல்திறனைக் கண்காணித்து உறுதி செய்யும்” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தமது துறை எப்போதும் கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்துகிறது மற்றும் மாநிலத்தில் உள்ள அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களிடையே நிலையான செயல்பாட்டு நடைமுறைகளுக்கு (SOP) இணங்குவதை வலியுறுத்துகிறது என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here