பாகிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1,290 ஆக உயர்வு

இஸ்லாமாபாத், செப்டம்பர் 4:

பாகிஸ்தானின் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, நாட்டில் கிட்டத்தட்ட 1,300 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை 1,290 ஐ எட்டியுள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் இறந்துள்ளனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ) தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பாகிஸ்தான் அரசு நிறுவனங்களும், தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நிவாரண நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. நாட்டின் பெரும் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக தெற்கில் பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா மற்றும் சிந்து மாகாணங்கள்.

அதில் சிந்து மாகாணத்தில் குறைந்தது 180 பேர் இறந்துள்ளனர், அதைத் தொடர்ந்து கைபர் பக்துன்க்வாவில் 138 பேர் மற்றும் பலுசிஸ்தான் 125 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5 லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம், 14,68,019 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன.

அதே நேரத்தில் 7,36,459 கால்நடைகள் வெள்ளத்தால் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 லட்சத்து 23 ஆயிரத்து 919 குடும்பங்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் ஆயிரத்து 825 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here