“அன்வாரும் வேண்டாம் DAPயும் வேண்டாம், என்னை பதவி நீக்கம் செய்தாலும் பரவாயில்லை” என்கிறார் ஹிஷாமுடின்

கோலாலம்பூர், நவம்பர் 21 :

பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து பணியாற்றப் போவதில்லை என்று தேசிய முன்னணியின் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் உறுதியாகக் கூறினார்.

“அரசாங்கத்தை அமைப்பதற்கு PH உடன் எந்த ஒத்துழைப்பையும் ஆதரிக்க மாட்டோம் . தேசிய முன்னணி PH தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அல்லது DAPயுடன் இணைந்து பணியாற்றக் கூடாது என்று ஹிஷாமுடின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.

“என்னை கட்சியிலிருந்து பதவி நீக்கம் செய்தாலும் பரவாயில்லை, நான் என் எண்ணத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன்” என்று ஹிஷாமுடின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here