உலக சாதனைக்காக முயற்சி செய்யும் உலகின் மிகப்பெரிய உதடு கொண்ட பெண்…

பல்கேரியா நாட்டைச் சேர்ந்த 25 வயது பெண்தான் ஆண்ட்ரியா இவானோவா(Andrea Ivanova). இவர் “உலகின் மிகப்பெரிய உதடு கொண்ட பெண்’’ என்ற சாதனையைப் பெற வேண்டும் என்பதற்காக 32 சிகிச்சைகள் (procedure) மற்றும் 15 இற்கும் மேற்பட்ட ஊசிகளை எடுத்துக் கொண்டுள்ளார்.

உதடு மட்டுமில்லாமல் நீளமான மற்றும் கூரான கன்னம் பெறுவதற்காகவும் மற்றும் மார்பக அளவைப் பெரிதாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். இது குறித்து ஆண்ட்ரியா இவானோவா(Andrea Ivanova) கூறுகையில், “என்னுடைய உதடுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

நான் புதிய சாதனையை செய்ய விரும்பினேன். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை Hyaluronic acid ஊசியைப் போட்டுக் கொள்வேன். பெரிய உதடுகளைத் தக்க வைத்துக் கொள்ள மாதந்தோறும் ஊசியைப் போட்டுக் கொள்வேன்.

உதடுகளைப் பெரிதாக்க 2018 ஆம் ஆண்டிலிருந்து முயற்சி செய்து வருகிறேன். அதற்காக 8,000 பவுண்டுகள் வரை செலவு செய்துள்ளேன். உலகின் நீளமான மற்றும் கூரான கன்னம் கொண்டிருக்கும் சாதனையையும் நான் அடைய வேண்டும், அதற்காகப் போராடத் தயாராக இருக்கிறேன்.

நான் இவ்வளவு தூரம் கடந்துவிட்டேன். எவ்வளவு செலவழித்தேன் என்று என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. பல ஊசிகள் போட்டிருக்கிறேன், இன்னும் போடவேண்டி இருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவர் எச்சரித்தும் தொடர்ந்து தன்னுடைய கன்னத்தைக் கூர்மைப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறார். வளர்ந்த பெரிய உதடுகள் அவருடைய நாசியை அடைத்தாலும், உணவைச் சாப்பிடுவதில் சிக்கலை எதிர்கொண்டாலும், இவர் தொடர்ந்தும் அந்த மருத்துவ நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறார்.

அதோடு தன்னுடைய மார்பகத்தின் அளவைப் பெரிதாக்கவும், இவர் அறுவை சிகிச்சைகள் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here