அடுத்தாண்டு ஏப்ரல் முதல் இங்கிலாந்து முழுவதும் 114 கிளைகளை HSBC வங்கி மூடுகிறது

லண்டன், டிசம்பர் 2 :

கோவிட்-19 தொற்றுநோயின் பின்னர் வங்கிக்கு நேரடியாக வருகை தரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்ததைத் தொடர்ந்து, வரும் ஏப்ரல் முதல் இங்கிலாந்து (UK) முழுவதும் உள்ள தனது 114 கிளைகளை மூடுவதாக HSBC வங்கி அறிவித்துள்ளது.

மூடப்படவுள்ள கிளைகளில் வாரத்திற்கு 250க்கும் குறைவான வாடிக்கையாளர்களே இருப்பதாகவும், இந்த கிளைகளின் மூடலுக்குப் பிறகு HSBC வங்கியின் 327 நெட்வொர்க்குகள் மட்டுமே செயல்படும் என்றும் HSBC தெரிவித்துள்ளது.

NatWest, Barclays மற்றும் Lloyds உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பிற வங்கிக் கிளைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, சமீபத்திய வாங்கி மூடல்கள் பிரிட்டனில் உள்ள பல நகர்ப்புறங்களுக்கும் ஒரு அடியாக இருந்ததாக அந்நாட்டு பட்த்திரிகையான Daily Mail தெரிவித்துள்ளது.

இருப்பினும், அதன் தொலைபேசி செயலியின் பயன்பாடு 2017 முதல் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றும், பெரும்பாலான பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையில் முடிக்கப்படுவதும் மற்றுமொரு காரணம் என்று அது மேலும் தெரிவித்துள்ளது.

சுமார் 100 ஊழியர்கள் வங்கியை விட்டு வெளியேறுவார்கள் என்று HSBC மதிப்பிட்டுள்ளது, ஆனால் பாதிக்கப்பட்ட கிளைகளில் உள்ள அனைத்து ஊழியர்களையும் மற்ற கிளைகளுக்கு அல்லது வெவ்வேறு பதவிகளுக்கு மீண்டும் பணியமர்த்தப் படுவார்கள் என நம்பப்படுகிறது.

HSBC UK விநியோக நிர்வாக இயக்குனர் ஜாக்கி உஹி கூறுகையில், HSBC வங்கி தற்போது ஒரு புதிய வங்கி மையத்தை உருவாக்கி வருவதாகவும், அதன் டிஜிட்டல் வங்கி சேவைகளில் அதிக முதலீடு செய்வதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here