எடையை குறைத்த நடிகர் விஜய் சேதுபதி – வைரலாகும் புகைப்படம்

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார் விஜய்சேதுபதி. இமேஜ் பார்க்காமல் மற்ற நடிகர்கள் படங்களில் வில்லனாகவும் நடிக்கிறார். விஜய்யின் ‘மாஸ்டர்’, கமல்ஹாசனுடன் ‘விக்ரம்’ ஆகிய படங்களில் அவர் நடித்த வில்லன் கதாபாத்திரங்கள் பேசப்பட்டன.

விஜய்சேதுபதிக்கென்று பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது. தெலுங்கு, இந்தி, மலையாள நடிகர்களும் விஜய்சேதுபதியை தங்கள் படங்களில் நடிக்க வைக்கிறார்கள். இதுவரை உடல் எடையை குறைக்காமல் எல்லா படங்களிலும் ஒரே மாதிரியான தோற்றத்திலேயே நடித்து வந்தார். ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதிலும் ஆர்வம் காட்டுவது இல்லை.

இந்த நிலையில் விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு செல்பி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கிறார். இளமையாகவும் தெரிகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் ஆச்சரியமாகி வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

விஜய்சேதுபதி நடித்த டி.எஸ்.பி. படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. தற்போது விடுதலை, இந்தியில் ஜவான், காந்தி டாக்ஸ் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்து நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here