அசத்த போவது யாரு புகழ் கோவை குணா திடீர் மரணம் ..

நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார்.

சிவாஜி கணேசன், கவுண்டமணி உட்பட பல சினிமா நட்சத்திரங்களின் குரல்களில் அட்டகாசமாக மிமிக்ரி செய்து ரசிகர்களிடையே மிக குறுகிய காலத்தில் பிரபலமடைந்தவர் கோவை குணா. பிரபல நகைச்சுவை நடிகரான கோவை குணா, அசத்த போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர்.

இவர் தனது மிமிக்கிரியால் பலரின் மனிதில் இடம்பிடித்த குணா அசத்த போவது யாரு நிகழ்ச்சியின் முதல் டைட்டில் வின்னரும் ஆவார்.

இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவருடைய மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை குணாவின் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகம் கோவை குணாவைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் ரசிகர்கள் தங்களது இரங்கல் குறிப்பில் பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here