“கண்ணா லட்டு தின்ன ஆசையா” நடிகை மருத்துவமனையில் அனுமதி

துபாயில் பிறந்து வளர்ந்தவர் நடிகை விஷாகா சிங். தன்னுடைய ஸ்கூல் படிப்பை வெளிநாட்டில் முடித்தாலும், கல்லூரி படிப்பை டெல்லியில் தான் முடித்தார். மீடியா துறை சம்மந்தமாக, முதுநிலை படிப்பை முடித்துள்ள விஷாகா சிங், கடந்த 2007 ஆம் ஆண்டு மாடலிங் துறையில் கால் பதித்தார். பல விளம்பரங்களில் நடித்துள்ள விஷாகா சிங்கை மிகவும் பிரபலமடைய செய்தது என்றால், டல் திவ்யா.. தூள் திவ்யா ஆகிட்டா என்கிற விளம்பரம் தான்.

இதை தொடர்ந்து கடந்த 2007 ஆம் ஆண்டு ‘கணப்பக்கம்’ என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் விஷாகா சிங். இதை தொடர்ந்து, தமிழில் நடிகர் அசோக் குமாருக்கு ஜோடியாக ‘பிடிச்சிருக்கா’ என்கிற படத்தில் நடித்தார். அடுத்தடுத்து இந்தி, கன்னடம், ஆங்கிலம், என பல்வேறு மொழிகளில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

குறிப்பாக தமிழில் இவர் சந்தானம் மற்றும் மறைந்த நடிகர் நடிகரும், மருத்துவரான சேதுவுக்கு ஜோடியாக நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு, வாலிப ராஜா என்கிற படத்தில் தான் கடைசியாக நடித்திருந்தார் விஷாகா சிங். நடிப்பு மட்டுமின்றி மாடலிங், என்எப்டி தொழிலிலும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காலமாற்றத்தால் ஏற்படும் உடல்நல பிரச்சினையால் விஷாகா பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் இதற்காக அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலரும் விரைவில் அவர் குணமடைய தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here