ஏப்ரல் 20ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் அகற்றப்படும்

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான டுவிட்டரை வாங்கி அதன் உரிமையாளரானார். எலான் மஸ்க் டுவிட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

டுவிட்டரில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் கணக்குக்கு பயன்படுத்தும் ‘ப்ளூ டிக்குக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ப்ளூ டிக் அங்கீகாரம் பெற்றுள்ள பயனர்களிடத்தில் இருந்து மாதம் தோறும் கட்டண சந்தா செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

 இந்த நிலையில், ஏப்ரல் 20ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் அகற்றப்படும் என்று டு விட்டர் சி.இ.ஓ எலான் மஸ்க் அறிவித்துள்ளார். வெரிபைடு கணக்கிற்கான அந்த புளூ டிக்கை தொடர்ந்து வைத்திருக்க, சந்தாதாரராக மாற பயனாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here