கைப்பேசி வெடித்ததால் விமானம் தரையிறக்கம்

இந்தியா- ராஜஸ்தானின் உதய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து ஏர்இந்தியா விமானம் டெல்லிக்குப் புறப்பட்டது. அப்போது, பயணி வைத்திருந்த கைப்பேசி ஒன்று திடீரென வெடித்து, விமானத்திற்குள் புகை கிளம்பியதால் பயணிகளிடையே பதற்றம் ஏற்பட்டது.

அதையடுத்து விமானம் உடனடியாகத் தரை இறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 140 பயணிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டு விமானம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அனைத்துச் சோதனைகளுக்குப் பிறகு விமானம் தாமதமாக டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here