“மலேசியப் பொருட்களை வாங்குங்கள்” KPDN அறிவுரை

முதன்மை இயக்குநர் டத்தோ ரோஹய்ஸி பஹாரின்

(எஸ்.வெங்கடேஷ்)

டாமன்சாரா:

வ்வாண்டிற்கான “மலேசியப் பொருட்களை வாங்குங்கள்” பிரச்சாரத்தின் செயல் பாட்டு முன்னோட்ட விழா இன்று டாமன்சாரா பண்டார் உத்தாமாவில் உள்ள ஸ்ரீ பெந்தாஸ் வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் உள்நாட்டு வாணிபம், வாழ்வாதார செலவினத்துறை அமைச்சின் விநியோக வாணிபம், வர்த்தகத்துறை முதன்மை இயக்குநர் டத்தோ ரோஹய்ஸி பஹாரின் கலந்து கொண்டார்.

இந்த 2023 மலேசியப் பொருட்களை வாங்குவதற்கான பிரச்சார அமலாக்கம் குறிப் பிட்ட சில வியூக முன்னெடுப்புகளை நடுநிலைப்படுத்துகின்றது. இவை உள்நாட்டு பொருளாதாரத்தை உயர்த்துவதோடு உள்நாட்டுத் தயாரிப்புச் சந்தையை விரிவு படுத்துகின்றது.இதுதவிர மலேசியப் பொருட்களை மக்கள் ஏற்றுக்கொள்வதை ஊக்கு விக்கவும் உதவுகின்றது.

இதன் அடிப்படையில் உள்நாட்டு பலசரக்குத்துறை -ஆன்லைன் தளங்களில் உள்ளூர் தயாரிப்புப் பொருட்களை அதிகப்படுத்துதல், மலேசியப் பொருட்களை பிரபலப்படுத் தும் பெருவிழா, மலேசிய பொருட்களின் பெருவிழாவையொட்டிய சிறு நடவடிக் கைகள், குறிப்பிட்ட அம்சங்களின் அடிப்படையில் விற்பனை, டிஜிட்டல் வரைவு ஊட கங்களுடன் வியூகக் கூட்டமைப்பு ஆகிய முன்னெடுப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இதுதவிர அமைச்சு உள்நாட்டு பலசரக்குத் துறையில் நாட்டில் புகழ்பெற்ற 16 நிறு வனங்களுடனும் 3 ஆன்லைன் தளங்களுடனும் வியூகக் கூட்டமைப்பை மேற்கொண்டு வருகின்றது.

அந்த நிறுவனங்கள் வாயிலாக உள்நாட்டுத் தயாரிப்புகள் தொடர்ந்து வலுப் படுத்தப்பட்டு வருவதை உறுதி செய்ய இந்தக் கூட்டமைப்பு தொடரப்படுகின்றது. மேலும் Animonsta,Warnakala ஆகிய நிறுவனங்களுடனும் அமைச்சு வியூகக் கூட்டமைப்பை மேற்கொண்டு வருகின்றது.

மலேசிய பொருட்களை வாங்குவதற்கான பிரச்சாரத்தை Papa Pipi dan Didi & Friends உள்ளிட்ட கணினி வேலைப்பாடு கதாபாத்திரங்களின் வாயிலாக ஊக்குவிக்க இந்தக் கூட்டமைப்பு முன்னெடுக்கப்படுகின்றது. மேலும் சிறப்பு அம்சத்தின் அடிப்படையி லான ஙெ்யல்பாட்டில் அமைச்சு எம்பிடிஏ எனப்படும் மலேசிய பூமிபுத்ரா வடி வமைப்பாளர் சங்கம், மலேசிய கைவினை வாரியம் ஆகியவற்றுடனும் கூட்டமைப்பு கொண்டுள்ளது.

ஃபேஷன், கைவினை அம்சங்கள் வாயிலாகவும் மலேசிய தயாரிப்புகளை மேம் படுத்த இந்தக் கூட்டமைப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று ஸ்ரீ பெந்தாஸ் வளாகத்தில் பலதரப்பட்ட உணவு வகைகள், உள்நாட்டு தயாரிப்புப் பொருட்கள் முகப்பிடங்களில் விற்பனைக்கு வைக்கப்பட் டிருந்தன. அதனைப் பார்வையிட்ட டத்தோ ரோஹய்ஸி வியாபாரிகளுக்கு ஊக்க வார்த்தைகளும் கூறினார்.

பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய அவர், உள்நாட்டு உற்பத்திப் பொருட்களை வாங்கக் கூறி ஊக்குவிக்க மடானி அரசாங்கம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒன்றாக இந்த 2023 மலேசியப் பொருட்களை வாங்குங்கள் என்ற பிரச்சாரமும் முன்னெடுக்கப்படுகின்றது எனக் குறிப்பிட்டார்.

மேலும் வாடிக்கையாளர்கள் வெளிநாட்டுப் பொருட்களுக்கு இணையான தரத்தைக் கொண்டுள்ள உள்நாட்டுத் தயாரிப்புகளைத் தேர்வு செய்து வாங்குவதை ஊக்குவிக்க முனைகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையில் Karnival Barangan Malaysia 2023 என்ற முதன்மை அங்கம் உள்ளிட்ட elajah Mini Karnival Barangan Malaysia 2023 விழா நடைபெறும் ஒவ்வோர் இடத்திலும் மலேசிய மக்கள் தவறாது பங்கேற்கும்படி டத்தோ ரோஹய்ஸி கேட்டுக்கொண்டார்.

இம்மாதம் 21ஆம் தேதி தொடக்கி 23ஆம் தேதி வரையில் சபாவிலும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி 7 ஆம் தேதி வரையில் ஜோகூரிலும் அக்டோபர் 22, 23 தேதிகளில் சரவாக்கிலும் இந்த விற்பனை விழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.     

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here