பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜோகூர் பாரு சுல்தானா அமினா மருத்துவமனையின் துணை மருத்துவ அதிகாரி மீது குற்றச்சாட்டு

ஜோகூர்:

டந்த ஏப்ரலில், தனது 14 வயது மருமகளை உடல் ரீதியான பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஜோகூர் சுல்தானா அமினா மருத்துவமனையின் துணை மருத்துவ அதிகாரிக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் இன்று சுமத்தப்பட்டன .

இருந்தபோதிலும், நீதிபதி சித்தி நோரைடா சுலைமான் முன்நிலையில் வாசிக்கப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் 31 வயதான குற்றம் சாட்டப்பட்டவர் மறுத்து, விசாரணை கோரினார்.

முதல் குற்றச்சாட்டின் அடிப்படையில், ஏப்ரல் 20 ஆம் தேதி அதிகாலை 1.20 மணிக்கு HSA குவார்ட்டர்ஸில் உள்ள குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்தினரின் வீட்டில் உடல் ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான அவருக்கு எதிராக, சம்பந்தப்பட்ட இரண்டு குற்றச்ச்சாட்டுகளுக்காக பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 (சட்டம் 792) பிரிவு 14(a) மற்றும் பிரிவு 14(b) இன் படி குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத்தண்டனையும் பிரம்படி வழங்கப்படும்.

இது பிணையில் வெளிவர முடியாத ஒரு குற்றம் என்பதால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை எதுவும் வழங்க அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் நூர் ஃபரா வஹிதா ஷாஹுதின் முன்வரவில்லை.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 15,000 ரிங்கிட் ஜாமீன் வழங்க நீதிமன்றம் அனுமதித்தது. மேலும் இந்த வழக்கு மீண்டும் நவம்பர் 22ஆம் தேதி ஆவணங்களை சமர்பிப்பதற்காக ஒத்திவைக்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here