மலேசிய ஆயுதப்படையின் 90வதுஆண்டு தினம் – மாமன்னர் வாழ்த்து

கோலாலம்பூர்:

ன்று 90 வதுஆண்டு நிறைவைக்கொண்டாடும் மலேசிய ஆயுதப்படைக்கு (ATM) மாட்சிமை தங்கிய பேரரசர் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா வாழ்த்துகளை தெரிவித்தார்.

“அனைத்துலக அரங்கில் தொடர்ந்தும் சிறந்து விளங்கவேண்டும் என தான் பிரார்த்திப்பதாகவும், நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதில் தற்போதைய மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் செய்த சேவைகள் மற்றும் தியாகங்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் மாமன்னர் தெரிவித்தார்.

மேலும் “மலேசிய ஆயுதப் படையில் பணியாற்றிய அனைத்து உறுப்பினர்கள், படைவீரர்கள் மற்றும் அனைவருக்கும் அவரது 90வது மலேசிய ஆயுதப்படை தின நல்வாழ்த்துகள்” என்று இஸ்தானா நெகாரா அதிகாரப்பூர்வ பேஸ்புக்கில் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here