ஜார்ஜ்டவுன்:
பினாங்கில் உள்ள பெரும்பாலான கடைகளில் ஐந்து சென்னுக்கும் குறைவான விலையுள்ள பிளாஸ்டிக் பைக்கு RM1 அறவிடப்படுகிறது , இது அவற்றின் பயன்பாட்டைக் குறைக்க “அபராதம்” போன்ற விதத்தில் அறவிடப்பட்டிருந்தாலும் கூட, கடந்த ஆண்டு கடைக்காரர்களிடமிருந்து பிளாஸ்டிக் பை விற்பனை செய்த பணமாக உள்ளூர் அதிகாரிகள் RM1 மில்லியன் வசூலித்துள்ளனர்.
இதன் மூலம் பினாங்குவாசிகள் இன்னும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர் என்று பினாங்கு தீவு நகராண்மைக் கழகத்தின் மேயர் டத்தோ ஏ. ராஜேந்திரன் கூறினார்.
மேலும் இந்த ஆண்டு குறித்த தொகை 800,000 ரிங்கிட் ஆக சிறிதளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
“பினாங்கு தீவு நகராண்மைக் கழகம் (MBPP) தினசரி 800 டன் கழிவுகளை சேகரிக்கிறது, அதில் 15% முதல் 20% பிளாஸ்டிக் கழிவுகளால் ஆனது” என்று நேற்று பெர்சியாரான் பாயான் இண்டா கடற்கரையில் நடந்த உலக தூய்மைப்படுத்தும் தின நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் அத்தகைய பிளாஸ்டிக் பைகளை வியாழன் முதல் ஞாயிறு வரை மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் ராஜேந்திரன் கூறினார்.




















