“பொறந்த தினத்திலேயே என் புள்ள செத்துப்போயிரிச்சி” -கதறும் தாய்

அலோர் காஜா:

த்தான் பெர்ச்சாவில் கடந்த வாரம் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மகனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அறிந்த தன் இதயம் சுக்குநூறாக வெடித்தது என்று கூறினார் பாதிக்கப்பட்டவரின் தாயான 55 வயதான பத்மா.

கடந்த செப்டம்பர் 10 முதல் காணாமல் போனதாகக் கூறப்ட்ட தனது மகன் R.டர்வின்ராஜ், 24 கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதாக போலீசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் கண்காணிப்பு கேமராவின் காட்சிகள் மூலம், மூவரால் தாக்கப்பட்டவர் தனது மகன் தான் என்று அடையாளம் கண்டுகொண்டதாக அவர் கூறினார்.

அவரது கூற்றுப்படி, அவரது மூத்த மகன் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி தனது 17 வயது சகோதரன் மற்றும் சில நண்பர்களுடன் திரைப்படம் பார்க்க அவர்களின் வீட்டை விட்டு வெளியேறினார்.

சம்பவத்திற்கு முன், பாதிக்கப்பட்டவர் ஒரு மத விழாவிற்காக கோலாலம்பூரில் இருந்ததாகவும், அங்கிருந்து திரைப்படத்திற்கு செல்ல அனுமதி கேட்டதாகவும் பத்மா கூறினார்.

“அந்த நேரத்தில், நான் டர்வினை வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்க தயங்கினேன், ஆனால் என் கணவர் மற்றும் குழந்தைகளின் வற்புறுத்தலுக்குப் பிறகு, இறுதியில் நான் அவரை அனுமதித்தேன் என்கிறார் அவர்.

“ஆனால் நான் செப்டம்பர் 10 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் தாம்பினில் உள்ள வீட்டிற்கு வந்தபோது, ​​என் மகன் வீட்டிற்கு இன்னும் வரவில்லை, எனவே அருகிலுள்ள காவல் நிலையத்தில் அவரைக் காணவில்லை என்று நாங்கள் புகாரளித்தோம்,” என்று அவர் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி டர்வின்ராஜ்ஜின் பிறந்தநாளைக் கொண்டாட முடியாமல் போனதை விட, அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி எங்கள் குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது என்று பத்மா கூறினார்.

தனது மகனுக்கு காதலி இல்லை என்றும், அவர் மேல் பொறாமைப்படுவதற்கான சாத்தியங்கள் இருக்காது என்றும், அனால் மகனுக்கு என்ன நடந்தது என்று தனக்குத் தெரியாது என்று கூறி பத்மா கவலைப்பட்டார்.

அண்மையில் அலோர் காஜாவில் ஆண் என நம்பப்படும் சடலம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பில் மலாக்கா போலீசார் அறிக்கை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here