2023 இறுதிக்குள் உள்ளூர் வெள்ளை அரிசி தட்டுப்பாடு சீராக்கப்படும் – டத்தோ அஸ்மான் மஹ்மூட்

கோலாலம்பூர்:

வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் (KPKM) நெல் மற்றும் அரிசி ஒழுங்குமுறைப் பிரிவின் நடவடிக்கைகளுக்குப் பிறகு, உள்ளூர் வெள்ளை அரிசி தட்டுப்பாடு இந்த ஆண்டு இறுதிக்குள் சீராக்கப்படும் என்று அதன் இயக்குநர் ஜெனரல் டத்தோ அஸ்மான் மஹ்மூட் தெரிவித்தார். கூறினார்.

சந்தையில் அரிசி விநியோகம் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான உடனடி முயற்சிகள் குறித்து ஆலோசிக்க வெள்ளிக்கிழமை புத்ராஜெயாவில் உணவக நடத்துனர்கள், சிறு விற்பனையாளர்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தரப்பினரிடையே ஒரு கூட்டம் நடைபெற்றதாக அவர் கூறினார்.

இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணும் நடவடிக்கையாக பெரிய மார்க்கெட்டுகளில் அரிசி விநியோகத்தை அதிகரிப்பதை உறுதி செய்தல் மற்றும் வணிக நோக்கங்களுக்காக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை வாங்க வர்த்தகர்களுக்கு தள்ளுபடிகள் வழங்குதல் போன்றவற்றை தமது குறை செயற்படுத்தவருவதாகவும் அவர் கூறினார்.

அத்தோடு நாட்டில் தற்போது “அரிசி விநியோகம் தொடர்பாக எந்த பிரச்சனையும் இல்லை என்பதையும், அனைவரின் நலனுக்காக இந்த சிக்கலை சமாளிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்,” என்று அவர் மேற்கோள் காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here