கெப்போங்கில் பணிப்பெண் பாலியல் பலாத்காரம்; முதலாளி கைது

கோலாலம்பூர்:

கெப்போங்கில் உள்ள ஒரு சொகுசுமாடி வீட்டுப் பிரிவில் பணிபுரிந்துவரும் இந்தோனேசியாவைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர், தான் தனது முதலாளியால் தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் , 29 வயதுடைய பணிப் பெண், லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமொன்றின் தொழிலாளர்கள் தனது அண்டை வீட்டினுள் பொருட்களை கொண்டு செல்வதை அவரது வீட்டு வாசலில் நின்று பார்த்துக்கொண்டிருந்துள்ளார் என்றும், பின்னர் அந்த பெண் அவர்களை அழைத்து தன்னை காப்பாற்றுமாறு சம்மந்தப்பட்ட தொழிலாளர்களிடம் உதவி கேட்டார் என்று ஹஃபிஸ்,33 (அவரது உண்மையான பெயர் அல்ல) என்பவர் ஹரியான் மெட்ரோவிற்கு தெரிவித்தார் என அது செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அந்தப் பெண் அவரை அழைத்து, காவல்துறையை அழைக்கச் சொல்லியும், தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சினார்.

“அவரது முதலாளி தன்னை இரும்பு கம்பியால் அடித்ததாகவும், அதன் விளைவாக அவர் உடலில் காயம் ஏற்பட்டதாகவும் அந்தப்பெண் கூறினார்,” என்று அவர் கூறினார்.

அதன் பின், அவர் காவல் நிலையத்திற்கு சென்று குறித்த சம்பவம் தொடர்பில் புகாரளித்தார்,” என்றும், அவரளித்த புகாரின் பேரில், தகவலறிந்து வந்த போலீசார் அந்த வீட்டை சோதனை செய்து, பாதிக்கப்பட்டவரை மீட்டனர் என்றார்.

ஆதாரங்களின்படி, பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது முதலாளியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

இதற்கிடையில், புக்கிட் அமானின் பெண்கள் மற்றும் குழந்தைகள் புலனாய்வுப் பிரிவின் (D11) தலைமை துணை இயக்குநர் , துணை ஆணையர் சித்தி கம்சியா ஹாசன் கூறுகையில், குற்றவியல் சட்டத்தின் 376வது பிரிவின்படி இந்தச் சம்பவம் விசாரிக்கப்பட்டதாகவும், மேலும் வீட்டைச் சுற்றிவளைத்த போலீஸ் குழு விசாரணைக்கு உதவ சந்தேக நபரையும் கைது செய்தது என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here