4ஆவது முறையாக ஆதரவற்றோருக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்த பாலா

நகைச்சுவை நடிகர் பாலா 4ஆவது முறையாக ஆதரவற்றோருக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கேபிவை என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறி முகமாகியவர் தான் பாலா. இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பல ரியாலிட்ரி ஷோக்களில் பங்குபற்றி வந்தார். பல்வேறு இசை வெளியீட்டு விழாக் களை தொகுத்து வழங்கி அதன்மூலம் சம்பாதித்து வருகிறார்.

அத்தோடு திரைப்படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகின்றார்.தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பாலானவற்றை ஆதரவற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க பயன்படுத்தி வருகிறார்.

125நாட்களில் நான்கு ஆம்புலன்ஸ் கொடுத்து இருக்கிறேன் இது என் தகுதிக்கும் சக்திக்கும் மீறிய விஷயம், பலர் உனக்கே வண்டி இல்ல இதுல, நீயே பிரண்டு கார்லதான் போர உனக்கு எதுக்கு இது எல்லாம் என்று கேட்கிறார்கள். பேன்ஸ் கார்ல நான் ரோட்ல போறதுக்கு, ரோட்ல இருக்குற மக்கள் இதுல போவாங்க. இது போல இன்னும் பல ஆம்புலன்ஸ்களை கொடுப்பேன்.

மேலும் நான் ஆம்புலன்ஸ் உதவி செய்வதால், பலர் எனக்கு உதவி செய்ய முன்வந்தனர்.ஆனால், மற்றவர்களின் காசில் நான் ஏன் உதவி செய்ய வேண்டும் அதற்கு அவர்களே செய்வார்களே. நான் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் தான் உதவிசெய்து வருகிறேன். யார்கிட்டயும் ஒரு ரூபாய் கூட வாங்கல என் பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன் என்று பாலா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

காரைக்காலைச் சார்ந்த இவர் தனது திறமை மூலம் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பினைப் பெற்றார். அவர் அடிக்கும் காமெடி கவுன்ட்டர்களை ரசிக்க தமிழ்நாடு மட்டுமல்லாது உலகின் பல்வேறு மூலைகளில் ரசிகர் பட்டாளம் உள்ளது.

இதனால் பிரபலமடைந்த பாலா, சினிமாவில் சிறு சிறு நகைச்சுவைப் படங்களில் தோன்றியும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் ஊர்த் திருவிழாக்களில் பங்கேற்றும் வருகிறார்.

இது தொடர்பாக சென்னையில் நான்காவது ஆம்புலன்ஸை வழங்கிவிட்டு காமெடி நடிகர் பாலா அளித்த பேட்டியில், ‘என் வாழ்வில் மறக்கமுடியாத நாள் இது. இதுமுறை 3 ஆம்புலன்ஸை கொடுத்துள்ளேன்.

ஒன்று, அறந்தாங்கி நமது இல்லத்திற்கு, இரண்டாவது குன்றி மலைவாழ் மக்களின் மருத்துவத் தேவைக்கு, மூன்று சோளக்களை கிராமத்திற்கு என மூன்று ஆம்புலன்ஸ் களைக் கொடுத்துள்ளேன். அத்தருணத்தில் மக்கள் ராஜா அண்ணன், சாலையோரத் தில் இருக்கும் ஆதரவற்றோருக்காக ஆம்புலன்ஸ் தரவேண்டும் என்று உரிமையுடன் கேட்டார். அதனால் சேலம், திருப்பூர், கோவை மாவட்டத்தில் இருக்கும் ஆதரவற் றோரை மீட்க இந்த ஆம்புலன்ஸை கொடுத்து உதவி இருக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here