TVET கல்வி பயில வாய்ப்பு கிடைக்காத இந்திய மாணவர்கள் நேரடியாக மனிதவள அமைச்சரை சந்திக்கலாம்

கோலாலம்பூர்:

TVET எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி துறையை வலுப்படுத்தும் நோக்கில், 2024-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் 680 கோடி ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளது.

மேலும் TVET பட்டதாரிகளுக்குச் சான்றிதழ் வழங்கும் திட்டத்திற்காக 10 கோடி வெள்ளி இந்த ஒதுக்கீட்டில் உட்படுத்தப் பட்டிருக்கிறது.

இந்நிலையில் 160 கோடி ரிங்கிட் நிதியைப் பயன்படுத்தி மனித வள மேம்பாட்டு வாரியம் (HRD Corp)17 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கும் என்று மனிதவள .அமைச்சர் வி.சிவகுமார் தெரிவித்தார்.

தொழில் திறன் கல்வியை பயில இந்திய மாணவர்கள் அதிக அளவில் முன் வர வேண்டும். இதனால் மாணவர்களுக்கு வருங்காலத்தில் சிறப்பான எதிர் காலம் காத்திருக்கிறது.

ஒருவேளை தொழில் திறன் கல்விக்கு மனு செய்து இடம் கிடைக்காத மாணவர்கள் நேரடியாக என்னை சந்திக்கலாம் என்று அமைச்சர் சிவகுமார் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here