தஞ்சோங் மாலிம் அருகே நடந்த விபத்தில் கெடா பாஸ் உறுப்பினர்கள் மூவர் பலி!

ஈப்போ:

ஞ்சோங் மாலிம் அருகே வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் நடந்தவிபத்தில் , கெடாவின் சுங்கை பட்டாணியைச் சேர்ந்த பாஸ் கட்சியின் மகளிர் பிரிவு தலைவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இறந்தவர்களில் சுங்கை பட்டாணி PAS சிறப்பு மகளிர் பிரிவு தலைவர் Fatihah Nabila Bukri, 23 என அடையாளம் காணப்பட்டதாக கூறினார்; ஏனையவர்கள் முஸ்லிமா தலைவர் தைபா சுலைமான், 61; மற்றும் கிளையின் உதவிச் செயலர் நூருல் நஜிஹா அம்சி, 27 எனவும் அடையாளம் காணப்பட்டதாக தஞ்சோங் மாலிம் மாவட்ட காவல்துறை தலைவர் ஹஸ்னி முஹமட் நசீர் கூறினார்.

இன்று சிலாங்கூரில் உள்ள ஷா ஆலமில் நடைபெற்ற பாஸ் கட்சியின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு மூவரும் சுங்கை பட்டாணிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் என ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here