நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் காலமானார்

சிரம்பான்:

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் டத்தோ சுல்கிஃப்லி முகமட் ஓமர், தனது 59 வயதில் காலமானார்.

இந்த விஷயத்தை உறுதி செய்த நெகிரி செம்பிலான் மாநில சட்டசபை சபாநாயகர் டத்தோ M.K. இப்ராஹிம் அப்துல் ரஹ்மான், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக சிலாங்கூரில் உள்ள செர்டாங் மருத்துவமனையில்  தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவேளை,  இன்று சனிக்கிழமை (அக். 21) காலமானார் என்று கூறினார்.

“சுல்கிஃப்லி மதியம் 1.30 மணியளவில் இறந்துவிட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அஸர் தொழுகைக்குப் பிறகு இறுதிச் சடங்கிற்காக அவரது மையத்து லெங்கெங் மசூதிக்கு எடுத்துச் செல்லப்படும். ” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

நெகிரி செம்பிலான் பார்ட்டி அமானா நெகாரா (Amanah) தலைவர் M.K இப்ராஹிம் கூறுகையில், சுல்கிஃப்லியின் மரணம் தமது கட்சிக்கு பெரும் இழப்பு என்றும் கவலை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here