கோலாலம்பூர்:
நாடு முழுவதும் நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் உடனடியாக அமைக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த முன்முயற்சிக்கான முன்னோடித் திட்டமானது ஒன்பது மாநிலங்களில் நிரந்தர நிவாரண மையங்களை உள்ளடக்கியது என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 28) பிரதமரின் கேள்வி நேரத்தின் போது, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சொத்து இழப்புகளைக் குறைப்பதற்கும் விரிவான வெள்ளப் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் அரசாங்கத்தின் தயார்நிலை பற்றி ஷசுல்கஹர் முகமட் டெலி (BN-Jempol) கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.




















