கோல திரெங்கானு:
திரெங்கானு மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 812 ஆக குறைந்துள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, 180 குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் செத்தியூ, டுங்கூன் மற்றும் மாராங்கில் உள்ள 10 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மூன்று மாவட்டங்களுடன் ஒப்பிடுகையிலத டுங்கூனில் அதிகமாக 147 குடும்பங்களைச் சேர்ந்த 583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அங்குள்ள ஆறு நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
செத்தியூ மாவட்டத்தில், 11 குடும்பங்களைக் கொண்ட மொத்தம் 50 குடியிருப்பாளர்கள் Kampung Nyatoh Surau இல் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதற்கிடையில், நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வெள்ளத் தகவல் வலைத்தளத்தின் அடிப்படையில், கம்போங் ஜெராமில் உள்ள சுங்கை நெருஸ், கோலா நெருஸ் மட்டுமே எச்சரிக்கை அளவை (2.2 மீட்டர்) தாண்டியுள்ளது.
எவ்வாறாயினும், திரெங்கானுவில் உள்ள பெரும்பாலான ஆறுகளின் நீர்மட்டம் சாதாரண அளவை விட அதிகமான அளவீடுகளைப் பதிவு செய்தாலும், வெள்ளம் தற்போது சீரடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.