ஜோகூரில் கைவிடப்பட்ட வங்காளதேசத் தொழிலாளர்களுக்கு சுமார் RM1 மில்லியன் ஊதியம் வழங்கப்பட்டது

பெட்டாலிங் ஜெயா:

வேலைக்காக ஜோகூரில் உள்ள பெங்கராங்கிற்கு அழைத்து வரப்பட்டு, ஏமாற்றப்பட்டதாக கூறப்பட்ட 733 வங்காளதேசத் தொழிலாளர்களுக்கு நீதி கிடைத்துள்ளது.

ஜோகூர் தொழிலாளர் துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து அந்தந்த தொழிலாளர்களுக்கு RM1,035,557.50 சம்பளம் வழங்கப்பட்டதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கின் முடிவு எதிர்கால தொழிலாளர் வழக்குகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்று கூறிய அமைச்சகம், நாட்டிலுள்ள மற்ற முதலாளிகளை கவனத்தில் கொள்ளும்படி எச்சரித்தது.
“இந்த வழக்கு, சட்டப்பூர்வமாக நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களை உள்ளடக்கியது, ஆனால் அவர்கள் நாட்டிற்கு வந்தவுடன் அவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை, பின்னர் அவர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.
“எந்தவொரு முதலாளிகளும் இவ்வாறான வழக்கில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டால், அதிகாரிகளால் கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படுவார்கள், மேலும் அவர்களது வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும்,” என்றும், மேலும் தொழிலாளர் சட்டங்களை மீறும் எந்தவொரு தரப்பினரிடமும் அமைச்சகம் சமரசம் செய்யாது என்றும் அது எச்சரித்தது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here