டாக்டர் மகாதீர்ஆரோக்கியமாக உள்ளார் என்கிறார் உதவியாளர்

பெட்டாலிங் ஜெயா:

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் சுயநினைவுடன் இருக்கிறார் என்றும், சமூக ஊடகங்களில் கூறப்படுவதுபோல அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் அவரது நெருங்கிய உதவியாளர் தெரிவித்துள்ளார்.

“அவர் இன்னும் IJN இல் சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் ஏதேனும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்தால் நாங்கள் நிச்சயம் அறிவிப்போம்” என்று நேற்று (பிப்ரவரி 19) தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

கடந்த ஜனவரி 26 அன்று IJN இல் அனுமதிக்கப்பட்ட பிறகு, நோய்த்தொற்றுக்காக IJN-ல் சிகிச்சை பெற்றதைத் தொடர்ந்து டாக்டர் மகாதீர் சிறிது காலம் ஓய்வெடுப்பார் என்று பிப்ரவரி 13 அன்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த வாரம் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடிக்கு எதிராக அவர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணையின் போது 98 வயதான டாக்டர் மகாதீரின் உடல்நிலை சரியில்லை என்று அவரது வழக்கறிஞர், மியோர் நார் ஹைதிர் சுஹைமி, நீதிமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைப்பதற்கான விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து டாக்டர் மகாதீரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்தி வைரலானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here