அதிக வெப்பம்; சபாவில் இதுவரை எந்த வெப்ப அலை தாக்கங்களும் பதிவாகவில்லை -சுகாதார துறை

கோத்தா கினாபாலு:

சபாவில் நிலவும் வெப்பம் மற்றும் வறண்ட காலநிலை காரணமாக இதுவரை வெப்ப அலைத்தாக்கம் எதுவும் பதிவாகவில்லை என்று மாநில சுகாதார இயக்குனர் டாக்டர் அசிட்ஸ் சன்னா கூறுகிறார்.

தற்போது நிலவும் வறட்சி தொடர்பான இரண்டு புகார்கள் மட்டுமே தமக்கு கிடைத்ததாக அவர் கூறினார், இவை தென்மேற்கு பியூஃபோர்ட் மாவட்டத்தில் நிகழ்ந்த வெப்பம் காரணமான சோர்வடைந்த சம்பவங்கள் என்று கூறினார்.

“முதல் வெப்பச் சோர்வு சம்பவம், ஒரு 50 வயது ஆடவர் மரத்தை வெட்டும்போது, சோர்வுக்குரியற அறிகுறிகளைக் காட்டிய சம்பவம்” என்று அவர் இன்று வியாழக்கிழமை (மார்ச் 14) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அந்த நபர் ஜனவரி 22 அன்று அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார், பின் அதே நாளில் நோயாளி வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.

“இரண்டாவது சம்பவம் 18 வயது ஆண் மாணவர் சம்மந்தப்பட்டது, அவர் கால்பந்து விளையாடும் போது வெப்ப சோர்வை அனுபவித்தார்” என்று டாக்டர் அசிட்ஸ் கூறினார்.

குறித்த மாணவர் மார்ச் 9 அன்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அதே நாளில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்று அவர் கூறினார்.

முன்னதாக மார்ச் 13 முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு தீபகற்பம் மற்றும் சபாவில் பல இடங்களில் வெப்பமான மற்றும் வறண்ட வானிலையை எதிர்கொள்ளும் என்று, மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) முன்னறிவித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here