இந்தியர்களின் கோட்டையான காப்பார் தொகுதி பறிபோனது; இப்போது கவுன்சிலர் பதவிக்கும் ஆபத்தா?

பி ஆர் ஜெயசீலன்

இந்தியர்களின் அரசியல் கோட்டையாக விளங்கியகாப்பார் நாடாளுமன்றத் தொகுதி தற்போது அரசியல் அடையாளமே தெரியாத ஒரு தொகுதியாக மாறி இருக்கிறது. 2008 ஆம் ஆண்டு நிகழ்ந்த அரசியல் சுனாமிக்கு பின்னர் இத்தொகுதியில் இந்தியர்களின் அரசியல் செல்வாக்கு தேய்ந்து கொண்டே வந்திருப்பதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

இந்தியர்களின் அசைக்க முடியாததாக விளங்கிய காப்பார் நாடாளுமன்றத் தொகுதி இப்போது கைமாறிபோயிருக்கிறது. அதேபோன்று 2008 ஆம் ஆண்டிலிருந்து இந்திய பிரதிநிதித்துவம் இருந்த நகராண்மைக் கழகப் பதவியும் ப்போது கைவிட்டுப் போகும் சூழலில் ள்ளது.

காப்பர் நாடாளுமன்ற தொகுதி வரலாற்றை நாம் சற்று திரும்பி பார்த்தால் மலேசிய அரசியலில் மிக முக்கியமான ஒரு தொகுதியாக காப்பார் நாடாளுமன்றத் தொகுதி விளங்கிவந்துள்ளது. அதேபோல் இந்திய சமுதாயத்தின் பலம்மிக்க ஒரு தொகுதியாக இத்தொகுதி விளங்கி வந்ததற்கும் வரலாற்றுப் பதிவு உள்ளது.

..கா. தேசியத் தலைவராக இருந்த டான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம் கோலக்கிள்ளான் தொகுதியில் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டாலும் அது காப்பார் தொகுதிக்கும் ட்பட்டதாகவே விளங்கியது.

காப்பார் வட்டாரத்தில் குறிப்பாக தோட்டப்புறங்களில் வாழ்ந்த பல ஆயிரம் இந்திய வாக்காளர்கள் வாக்களித்து அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பினர். எரிசக்தி தொலைத்தொடர்பு அமைச்சராகவும் பின்னர் போக்குவரத்து துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் திடீர் மறைவுக்கு பின்னர் அத்தொகுதியில்போட்டியிட்ட டத்தோ வி. கோவிந்தராஜ் நாடாளுமன்றசெயலாளர் பொறுப்பை வகித்தார். பின்னர் தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் காப்பார் நாடாளுமன்றத்தொகுதியாக மாற்றம் கண்ட இத்தொகுதியில் . .கா.வேட்பாளராக வழக்கறிஞர் டி. பி. விஜேந்திரன் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் நாடாளுமன்ற துணை சபாநாயகராகவும் நியமிக்கப்பட்டார்.

அதன்பிறகு ..கா. வேட்பாளராக டாக்டர் லீலா ராமா ஒரு தவணையும் பின்னர் ..கா. மகளிர் பிரிவுத் தலைவியாகபொறுப்பு வகித்த டத்தின் படுக்கா கோமளாதேவி இரண்டு தவணைகள் இத்தொகுதியில் போட்டியிட்டு கல்வி அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளராக பொறுப்பு வகித்தார்.

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒருமிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.அப்பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி ஐந்து மாநிலங்களை நம்பிக்கை கூட்டணியிடம் இழந்தது.

காப்பார் நாடாளுமன்றத் தொகுதித் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட எஸ்.மாணிக்கவாசகத்திடம் பறி கொடுத்தது. மூன்றாவது தவணையாக போட்டியிட்ட டத்தின் படுக்கா கோமளா தேவி தோல்வியை தழுவினார்.

அதன் பிறகு 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இத்தொகுதியில் நம்பிக்கை கூட்டணியின் சார்பில் புதுமுகமான ஜி. மணிவண்ணன் களம் இறக்கப்பட்டு வெற்றிபெற்றார். ..கா வேட்பாளராக போட்டியிட்ட .சக்திவேல் தோல்வியைத் தழுவினார்.

அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டில்நடைபெற்ற பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி காப்பார்நாடாளுமன்றத் தொகுதிக்குப் பதிலாக கோலங்காட் நாடாளுமன்றத் தொகுதியை இந்திய வேட்பாளர்களுக்கு ஒதுக்கியது. அத்தேர்தலில் காப்பார் தொகுதியில் பி கே ஆர்வேட்பாளராக டத்தோ அப்துல்லா சானி களம்இறக்கப்பட்டார். கோலங்காட் நாடாளுமன்ற தொகுதியில்பி கே ஆர் கட்சியின் சார்பில் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் போட்டியிட்டார். இருவருமே வெற்றி பெற்றனர். டாக்டர் சேவியர் அமைச்சரானார்.

அத்தேர்தலில் ..கா.வின் சார்பில் காப்பார்தொகுதியில் களம் இறக்கப்பட்ட டத்தோ மோகனா முனியாண்டி தோல்வியைத் தழுவினார். கடந்த 22 ஆம் ஆண்டுநடைபெற்ற பொது தேர்தலில் மூன்று முப்பெரும் அணிகள்பொது தேர்தலில் களம் கண்டன. பக்காத்தான் ஹராப்பான், பாரிசான் நேஷனல், பெரிக்கத்தான் நேஷனல் என மூன்று மாபெரும் அணிகள் பிரிந்து தனியாக களம் கண்டன.  

அப்போது கடுமையான தொகுதி எனக் கருதப்பட்டகாப்பார் தொகுதியை பாரிசான் நேஷனல் கா வேட்பாளருக்கு வழங்காமல் அம்னோ வேட்பாளருக்குக் கொடுத்தது.

இதன்வழி காப்பார் நாடாளுமன்றத் தொகுதியின்இந்திய வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்காமல் வரலாற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு மேல் இந்தியர்களின் கோட்டையாக விளங்கிய காப்பார் நாடாளுமன்றத் தொகுதி இந்திய வேட்பாளர் இன்றி தேர்தல்களம் காணும் நிலைமைக்குத் தள்ளப்பட்டது.  

அந்த நாடாளுமன்றத் தொகுதிக்குப் பதிலாக செமந்தாசட்டமன்ற அல்லது மேரு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று இந்தியர்களுக்கு வழங்கப்படும் என்று பேசப்பட்டது அனைத்தும் கானல்நீராகிப் போனது. இந்த பாதிப்புகள் நாடாளுமன்றம், சட்டமன்றத்தோடு நின்று விடாமல் தற்போது கவுன்சிலர் பதவியிலும் இந்தியர்களின் வாய்ப்பு கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.

2008 ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநிலத்தில் நம்பிக்கைகூட்டணி ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது காப்பார் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஓர் இந்திய கவுன்சிலர் நியமனம் என்பது தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்தது. டத்தோ மணிவண்ணன் வேலு, நாதன் கணேஸ்வரன், மதுரைவீரன், சுசிமரியா ஆகியோர் காப்பார் தொகுதிக்கான நகராண்மைக்கழக பொறுப்புகளை வகித்து வந்தனர்.

ஆனால், 2024ஆம் ஆண்டிற்கான நியமனத்தில் இத்தொகுதிக்கான இந்தியப் பிரதிநிதி நியமிக்கப்படாமல் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இந்த நியமனத்தில்பல கோளாறுகள் நிகழ்ந்து வருவதாகவும் பி கே ஆர் கட்சி வட்டாரத்தில் பல பிரச்சினைகளும் சிக்கல்களும் எழுந்துள்ளதாக தெரியவருகிறது.

கடந்த 15 ஆண்டுகளாக இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுவந்த இந்த நகராண்மைக் கழகப் பதவி இந்திய பிரதிநிதி ஒருவருக்கு கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது காப்பார் தொகுதி இந்தியர்களுக்குபெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் கொடுத்துள்ளது.வரும் பி கே ஆர் கட்சி தேர்தலில் இதன் குமுறல்வெளிப்படுமா? அல்லது பொது தேர்தலில் இதற்கு பதிலடிகொடுக்கப்படுமா? என்பதை காப்பார் வட்டார இந்தியவாக்காளர்கள் முடிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத் தொகுதியும் இந்தியர்களிடமிருந்துகைவிட்டு போனது நகராண்மைக் கழகப் பொறுப்பும் நம்மைவிட்டுப் பறிபோகும் நிலையில் காப்பார் தொகுதி இந்தியர்களின் நிலைமை என்ன என்பது பெரும்கேள்விக்குறியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here