150 ஆண்டுகளாக தொடர்ந்த சட்டங்கள் இனி இல்லை… இன்று முதல் அமலுக்கு வருகின்றன புதிய குற்றவியல் சட்டங்கள்

திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள்  இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதனை தொடர்ந்து 150 ஆண்டுகளாக நீதி மற்றும் காவல்துறையில் நடைமுறையில் இருக்கும் IPC, CRPC சட்டங்கள் முழுவதுமாக நீக்கப்பட்டு புதிய சட்டங்கள் அமலுக்கு வருகின்றன.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலிருந்து அமலில் இருக்கும் 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்றுகள் சட்டம் ஆகிய மூன்றையும் முழுவதுமாக மாற்றும் நோக்கில், பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆகிய 3 திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்களை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில் விபத்து ஏற்படுத்தும் ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வழிவகுக்கும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவின் 106 (2) ஆவது விதியை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் எழுந்த நிலையில், அந்த பிரிவு மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here