மணிலா:
பிலிப்பைன்ஸில்ல் உள்ள மிண்டானாவ் தீவின் கிழக்குக் கரையோரப் பகுதியில், இன்று 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் புவிஅறிவியல் ஆய்வு மையம் இத்தகவலை வெளியிட்டது.
நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அது கூறியது.
இந்நிலையில், இந்த நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவிலானது என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என்று அமெரிக்காவின் தேசிய சுனாமி எச்சரிக்கை நிலையம் கூறியது.
இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் எதிர்பார்க்கப்படவில்லை என்று கூறிய பிலிப்பைன்ஸின் நிலநடுக்கம் தொடர்பான ஆய்வு அமைப்பு (ஃபிவோல்க்ஸ்) நிலநடுக்கத்துக்குப் பிந்திய நிலஅதிர்வுகள் ஏற்படக்கூடும் என்று எச்சரித்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.





















