பெண் ஒருவர் பத்து மாதத்தில் வெவ்வெறு பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் சரிதா ஹோலண்ட் (வயது 41). திருமணமான இவர் கர்ப்பம் ஆனார். பிரசவத்தில் அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பின்னர் 10 வார இடைவெளியில் சரிதா மீண்டும் கர்ப்பம் ஆனார். குறுகிய காலத்தில் தான் மீண்டும் கர்ப்பம் அடைந்தது குறித்து டாக்டர்களிடம் ஆலோசித்தபோது இரட்டை குழந்தைகள் பிறக்கும் என கூறியுள்ளனர்.
சரியாக 30 வாரங்கள் 5 நாட்கள் கழித்து சரிதா ஹோலண்டுக்கு பிரசவ வலி எடுத்தது. ஆபரேஷன் மூலம் நடந்த பிரசவத்தில் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. 2 மாதங்கள் குறைபிரசவத்தில் அந்த குழந்தைகள் பிறந்தன.
இந்தநிலையில் தாயும் சேயும் நலமுடன் வீடு திரும்பியநிலையில் இதுதொடர்பான வீடியோவை அவர் தன்னுடைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பெண் ஒரு குழந்தை பெற்ற 2-வது மாதத்தில் மீண்டும் கர்ப்பம் தரித்து 8-வது மாதத்தில் மேலும் 2 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். எனவே 10 மாதங்களில் 3 குழந்தைகளை பெற்றதால் அவரது வீடியோ சமூக வலைத்தளத்தில் கலக்கி வருகிறது.