கோலாலம்பூர்:
இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள ஆசியான் உச்சிமாநாட்டை முன்னிட்டு, பல அமைச்சகங்கள், அரசு துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களின் அரசு ஊழியர்களிடமிருந்து வீட்டிலிருந்து வேலை (WFH) விண்ணப்பங்களைப் பெறத் தொடங்கியுள்ளன.
அவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கையை நாங்கள் வெளியிடவில்லை, ஆனால் சில ஏற்கனவே பல அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று பொது சேவைத் துறை (PSD) இயக்குநர் ஜெனரல் டான் ஸ்ரீ வான் அகமட் தஹ்லான் அப்துல் அஜீஸ் கூறினார்.
“முக்கியமானது என்னவென்றால், அரசு ஊழியர்கள் தங்கள் விண்ணப்பங்களை அந்தந்த துறைத் தலைவர்களிடம் (HODs) சமர்ப்பிக்க வேண்டும், பின்னர் அவர்கள் சாலை மூடல்களால் குறித்த அதிகாரிகளின் பயணம் உண்மையில் பாதிக்குமா என்பதை சரிபார்க்க வேண்டும், ஏனெனில் இந்த நெகிழ்வுத்தன்மையை யாரும் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை என்று அவர் சொன்னார்.
முன்னதாக, ஆசியான் உச்சிமாநாட்டின் போது போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படக்கூடிய அரசு ஊழியர்கள் WFH ஏற்பாடுகளுக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கடந்த மே 7 அன்று, பொது சேவைத் துறை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





















