“வாசனை, சுவை அறியும் திறனை இழந்தேன்” – மம்மூட்டி உருக்கம்!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்மூட்டி, ‘கேர் அண்ட் ஷேர் இன்டர்நேஷனல் பவுண்டேஷன்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த 16-வது ஆண்டு விழா கொச்சியில் அண்மையில் நடைபெற்றது. இதில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக Cochlear Implant அறுவை சிகிச்சை செய்யும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் அவர் பேசுகையில், தொடர்ந்து பேசிய அவர், ” நீண்ட காலமாக என்னால் எந்த வாசனையையோ, எதன் சுவையையோ உணர முடியவில்லை.

அந்தத் திறன்களை நாம் இழக்கும்போதுதான் அவற்றின் உண்மையான மதிப்பு நமக்குத் தெரியும். இப்போது மெதுவாக அதிலிருந்து மீண்டு வருகிறேன். அதுபோல கேட்கும் திறன் என்பது கடவுள் கொடுத்த மிகப்பெரிய வரம்” என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மம்மூட்டியின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவின. தற்போது அவரே தனது உடல்நிலை குறித்து அவர் பேசியுள்ளது கவனம் பெற்று வருகிறது.

மம்மூட்டி தற்போது மோகன்லாலுடன் இணைந்து மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ‘பேட்ரியாட்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் ஏப்ரல் 23 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here