சிலாங்கூர், பேராக் மற்றும் சரவாக்கில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய சூறாவளிக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கோலாலம்பூர், மார்ச் 20, 2026:

மலேசியாவின் சில மாநிலங்களில் இன்று மதியம் வரை பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய சூறாவளி காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் இன்று நண்பகல் வெளியிட்ட அறிக்கையின்படி, பின்வரும் பகுதிகளில் மதியம் 3:00 மணி வரை மோசமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது: சிலாங்கூர்: சபாக் பெர்ணம் (Sabak Bernam), பேராக்: பாகன் டத்தோ (Bagan Datuk) மற்றும் ஹிலிர் பேராக் (Hilir Perak), மற்றும் சரவாக்: கூச்சிங், சமரஹான், ஸ்ரீ அமான், பெத்தோங் (புசா மற்றும் பெத்தோங்), சரிகேய் (மேராடோங்), சிபு மற்றும் மூக்கா (தாரோ, மாத்து மற்றும் தலாட்) ஆகிய இடங்களில் இந்த வானிலை நிலவும் என அது தெரிவித்துள்ளது.

ஹரி ராயா பண்டிகைக்காக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ள நிலையில், இந்த வானிலை மாற்றம் போக்குவரத்து நெரிசலையும், சாலைகளில் வழுக்கும் தன்மையையும் ஏற்படுத்தக்கூடும்.

மேலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக 20 மி.மீ-க்கும் அதிகமான மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படும் போதோ அல்லது அதற்கான அறிகுறிகள் தென்படும் போதோ இத்தகைய குறுகிய கால எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

பொதுமக்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், குறிப்பாக திறந்தவெளிப் பகுதிகளில் இருப்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here