‘BN’ கூட்டணியின் அமோக வெற்றி, மக்கள் நிலையான அரசாங்கத்தை விரும்புவதைக் காட்டுகிறது: ஜாம்ப்ரி நெகிழ்ச்சி!

கோலாலம்பூர்:

நடந்து முடிந்த ஜோகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் (BN) கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றது, மக்கள் ஒரு நிலையான மற்றும் ஆற்றல்மிக்க அரசாங்கத்தை விரும்புவதையே காட்டுகிறது என்று அக்கூட்டணி தெரிவித்துள்ளது.

தங்களுக்கு இத்தகைய மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த ஜோகூர் மாநில வாக்காளர்களுக்குப் பாரிசான் நேஷனல் கூட்டணியின் தலைமைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ ஜாம்ப்ரி அப்துல் காதர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இந்த வெற்றி என்பது வெறும் சாதாரண அரசியல் வெற்றி மட்டுமல்ல என்றும், மாறாக ஜோகூர் மக்கள் தங்களின் எதிர்காலத்தை நம்பித் தங்களிடம் ஒப்படைத்துள்ள மாபெரும் பொறுப்பு என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here