புக்கிட் மெர்தாஜாமில் வியட்நாம் நபர் உட்பட நான்கு பேர் கைது – RM3.72 மில்லியன் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

பினாங்கு மாநில போதைப்பொருள் தடுப்பு  குற்றப்புலனாய்வு பிரிவினர் (NCID) புக்கிட் மெர்தாஜாமில் செவ்வாய்க்கிழமை முதல் புதன்கிழமை வரை நடத்திய இரு அதிரடிகளில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வியட்நாமை சேர்ந்தவர். கைது நடவடிக்கையில் மொத்தமாக 112.1 கிலோ கிராம் கஞ்சா (RM3.72 மில்லியன் மதிப்பு) பறிமுதல் செய்யப்பட்டது.

முதல் அதிரடியில் ஹோட்டல் அறை ஒன்றில் இருவர் மற்றும் Lobby யில் ‘transporter’’ வேலை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 9.2 கிலோ கஞ்சா மற்றும் 4.2 கிலோ கஞ்சா பெட்டிகள் மீட்கப்பட்டன.

பின்னர் பிடிபட்ட வியட்நாம்காரரிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில், Seberang Jayaயில் உள்ள வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 97.7 கிலோ கஞ்சா பெட்டிகள் உள்ள 105 பாக்கெட்டுகள் மீட்கப்பட்டன. இந்த வீடு மாதம் RM2,800க்கு வாடகைக்கு எடுக்கப்பட்டது.

சிக்கிய நபர்கள் முந்தைய போதைப்பொருள் குற்றங்களில் 7-13 தடவைகள் கைது செய்யப்பட்டவர்கள். இவர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் செயலில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான நான்கு பேரும் ஜூலை 29 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here