ANAK EMAS திட்டத்தின் வழி Simpan SSPN கல்வி எதிர்காலத்திற்கு ஒளி தரும்

ஜார்ஜ் டவுன்:

PTPTN எனப்படும் தேசிய உயர் கல்வி நிதியகம் பினாங்கு மாநில அரசாங்கத்துடன் ANAK EMAS திட்டத்தின் வழி வியூக ஒத்துழைப்பை 2024 ஜனவரி 15ஆம் தேதி தொடங்கியது. இது பினாங்கு மாநில அரசாங்கத்தின் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் ஒரு தடவை உதவித் தொகையாக 200 ரிங்கிட் இரண்டு வயதிற்கும் கீழ்ப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

இதற்கு அக்குழந்தையின் தாயோ அல்லது தந்தையோ பினாங்கு வாக்காளராக தேர்தல் ஆணையத்தில் கண்டிப்பாக பதிவு செய்து இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். இத்திட்டத்தின் கீழ் 100 ரிங்கிட் Simpan SSPN Prime சேமிப்பு கணக்கு திறப்பதற்கு வழங்கப்படும். எஞ்சிய 100 ரிங்கிட் தகுதிபெற்றவர்களுக்கு வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.

ANAK EMAS திட்டத்தின் ஓர் அங்கமாக PTPTN அண்மையில் பினாங்கு செபெராங் ஜெயா மருத்துவமனைக்கு வருகை புரிந்து 2025 அக்டோபர் மாதம் பிறந்த 50 குழந்தைகளுக்கு 10 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான சன்மானத்தை வழங்கியது. இந்தக் குழந்தைகளுக்கு Simpan SSPN Prime கணக்கு திறப்பதற்கு நிதியும் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் வழங்கப்பட்டன.

Simpan SSPN Prime சேமிப்பு கணக்கு திறப்பதற்கு 100 ரிங்கிட்டும் இந்த உதவியைப் பெற்ற ஒவ்வொருவருக்கும் தலா 100 ரிங்கிட் மதிப்பிலான குழந்தைகளுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் அடங்கிய ஹெம்பர் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை பினாங்கு மாநில சமூக மேம்பாடு, சமூக நலன் இஸ்லாம் அல்லாதார் விவகாரத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் துவான் லிம் சியூ கிம் நிறைவு செய்து வைத்தார். இதில் PTPTN தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம், PTPTN நிர்வாகத் தலைவர் அமாட் டசுக்கி அப்துல் மஜிட், பினாங்கு மகளிர் மேம்பாட்டு கார்ப்பரேஷன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஓங் பீ லெங், செபெராங் ஜெயா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் எஸ்.ஷாமினி, PTPTN உயர் அதிகாரிகள், பினாங்கு மாநில PTPTN இயக்குநர் முகமட் மூசின் அப்துல் ரஹ்மான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Simpan SSPN Prime வழி ANAK EMAS திட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பதில் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் இதற்கு அமோக ஆதரவு கிடைத்து வருவதாகவும் லிம் சியூ கிம் குறிப்பிட்டார்.

2024 ஜனவரி 15ஆம் தேதியிலிருந்து 2025 செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் 7,771 கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. சேமிப்பு மதிப்பு 777,100 ரிங்கிட் என்றும் அவர் தெரிவித்தார். தங்களுடைய பிள்ளைகளுக்காக இத்திட்டத்தின் வழி சூப்பர் ஹீரோவாக மாறியிருக்கும் பினாங்கு மக்களுக்கு தம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

ANAK EMAS திட்டத்தின் வழி கிடைக்கப்பெற்றிருக்கும் சலுகையைப் பயன்படுத்தி மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் அதில் பங்கேற்று தங்களது பிள்ளைகளுக்காக சேமிக்கும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று லிம் சியூ கிம் கேட்டுக் கொண்டார்.

ANAK EMAS திட்டம் வெற்றி பெறுவதற்கு பாடாற்றி இருக்கும் புவான் லிம் சியூ கிம்மிற்கு தம்முடைய நன்றியைப் பதிவு செய்து கொள்வதாக PTPTN தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம் கூறினார். இத்திட்டத்தில் மிகுந்த ஈடுபாட்டுடனும் கடப்பாட்டுடனும் புவான் லிம் சியூ கிம் ஈடுபட்டு அதன் வெற்றிக்கு பெரும் பங்களிப்பை வழங்கியிருக்கிறார். பிள்ளைகளின் கல்வி நலன்களுக்காக இந்த ஒத்துழைப்பு இன்னும் உத்வேகத்துடன தொடரும் என்று நம்புவதாக அவர் சொன்னார்.

இந்த உன்னதமான திட்டத்திற்கு பக்கபலமாக இருக்கும் மாநில அரசாங்கத்திற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here